Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல் வாய்ப்பு கொடுத்தும் தாமரையை பற்றி பேசாத பிரியங்கா...டாஸ்க்கில் இப்படி அடுக்குகிறாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாமரையை பற்றி தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் இடத்தில் தெரிவிக்காமல் விட்டு விட்டு இப்போ மட்டும் இப்படி பேசலாமா??என்று நெட்டிசன்கள் பிரியங்காவை கலாய்த்து வருகின்றனர்.

கண்ணாடி பிம்பம் டாஸ்க்கில் தாமரையை பற்றி பேசும்போது நல்ல விதமாக பேசிய ப்ரியங்கா இப்போது இப்படி குற்றசாட்டுகளை வைக்கலாமா கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

வாய்ப்பு வரும்போது தகுந்த இடத்தில் தான் எனது கருத்தை கூறுவேன் என்று பிரியங்கா திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில நேரங்களில் சுவாரஸ்யமாக போட்டியாளர்கள் செய்யும் செயல்கள் இருக்கும். அதே சில நேரங்களில் என்ன இவர்கள் இப்படி செய்து விட்டார்களே என்று கடுப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதுபோலத்தான் நேற்றைய எபிசோட்டில் பிரியங்கா செய்தது பலருக்கும் இருந்தது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிரியங்கா மட்டுமல்லாமல் தாமரை செல்வியும் கொஞ்சமும் குறைந்தவர் அல்ல என்று அவரும் தன்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன் என்று ரசிகர்களை குழப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிரியங்காவுக்கு கமல் கொடுத்த வாய்ப்பு

பிரியங்காவுக்கு கமல் கொடுத்த வாய்ப்பு

கடந்த வாரம் நடைபெற்ற கண்ணாடியில் பின்பமாக இருந்து தாமரையின் கேரக்டரை சொல்ல வேண்டிய இடத்தில் பிரியங்கா அவரைப் பற்றி நல்லவிதமாக மட்டுமே கூறியிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி எல்லாம் ஐஸ் வைக்கிறார் என்று கூறிக் கொண்டிருந்தனர். அதைத்தான் கமல் மீண்டும் பிரியங்காவிடம் அதற்கான விளக்கத்தை கேட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு வாய்ப்புக் கொடுத்து தாமரையைப் பற்றி தெளிவாக தங்களுடைய கருத்தை எடுத்துச் சொல்லவும் என்று கூறியிருந்தார்.

அப்போ அப்படி பேசிய பிரியங்கா

அப்போ அப்படி பேசிய பிரியங்கா

கமல் முன்னிலையில் என்னுடைய மனதில் தாமரையை பற்றி இப்படித்தான் இருக்கிறது என்று அடுக்கடுக்காக பல தாமரையின் நல்ல குணங்களை மட்டுமே கூறிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து ஒரு கட்டத்தில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கமலும் வெறுப்படைந்து விட்டார் போல. அதனால் தான் போதும் நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டார். இதை மனதில் வைத்துக் கொண்டுதான் நேற்றைய எபிசோட்டில் பிரியங்கா தாமரையை வைத்து செய்து விட்டாரோ என்று பலர் எண்ணி வருகின்றனர்.

பிரியங்காவிடம் கேள்வி கேட்ட சிபி

பிரியங்காவிடம் கேள்வி கேட்ட சிபி

நேற்றைய எபிசோட்டில் இந்த வார தலைவர் பதவிக்கான போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்தது அந்த டாஸ்கில் தாமரை இந்த வார தலைவர் பதவியில் இருப்பதற்கு தகுதி இல்லை என்று பிரியங்கா அடுக்கடுக்கான காரணங்களைக் கூறிக் கொண்டிருந்தார். இதைக்கேட்டதும் அருகிலிருந்த சிபி அப்போ இதையெல்லாம் நேற்றைய எபிசோட்டில் கமல் முன்னாடி ஏன் சொல்லவில்லை என்று முதல் கேள்வியால் துளைத்து எடுத்து இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இதைத்தான் நாங்களும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+