காதல் மனைவியோடு கடற்கரையில் திருமண நாள் கொண்டாட்டம்...அன்பு பரிசு கொடுத்த ஆரி
சென்னை: ஆரியின் திருமண நாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Recommended Video
திருமண நாள் பரிசாக கடற்கரையில் ஆரி தன்னுடைய மனைவிக்கு அன்பு பரிசு கொடுத்துள்ளார்.
வருடங்கள் மாறினாலும் காதல் மாறாது என்று இவர் நிரூபித்திருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம்
வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இவர் நடித்த திரைப்படங்களில் கூட அந்த அளவுக்கு இவருக்கு பேரும் புகழும் கிடைக்கவில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவருக்கு ரசிகர்கள் படை பட்டாளத்தோடு தொடங்கிவிட்டார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னுடைய நிலையிலிருந்து மாறாத இவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

வாழ்க்கையை மாற்றிய காதல்
பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் இவர் அதிகமாக ரசிகர்களை கவர்ந்ததால் தான் இவரால் டைட்டிலை வின் பண்ண முடிந்தது. இவருடைய வெற்றிக்கு எப்போதுமே தன்னம்பிக்கையும், தைரியமும் காரணம் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருந்த நிலையில், அது மட்டுமல்ல என்னுடைய காதல் மனைவியும், என்னுடைய பாசமான குழந்தையும் என்று இவர் அடிக்கடி கூறியிருக்கிறார். எளிமையாக இருந்த காலகட்டத்தில் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்தாலும் அதற்குப் பிறகு வாழ்க்கையில் ஒவ்வொரு வெற்றிக்கும் மனைவியின் ஊக்கம் மிக்க வார்த்தை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

தளராத தன்னம்பிக்கை
பல ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் அனைத்து போட்டியாளர்களும் திரும்பும் பக்கம் எலலாம் இவரை டார்கெட் செய்து கொண்டிருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தைரியமாக தன்னுடைய நிலையில் இருந்ததைப் பார்த்து தான் இவருக்கு ரசிகர்கள் பலர் பேன்ஸ் பேஜ்களை அமைத்து ஆர்மி தொடங்கி இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். இப்ப வரைக்கும் இவருடைய பெயரை சொன்னதும் ரசிகர்களுக்கு எனர்ஜி கூடிவிடுகிறது.

அழகான திருமணநாள் பரிசு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சினிமாக்களில் கொடி கட்டி பறப்பார் என்று இவருடைய ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவ்வளவு பெரிய மாற்றம் விரைவில் நடைபெற வில்லை என்றாலும் சீக்கிரத்தில் நடைபெறும் என்று அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய திருமண நாளை கடற்கரையில் அழகாக கொண்டாடி இருக்கிறார். வெள்ளை உடையில் தன்னுடைய மனைவியின் கைகோர்த்தபடி இவர் கடற்கரையில் நடந்து சென்று மனைவிக்கு காதல் பரிசாக மோதிரத்தை பாசமாக கொடுத்து, அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதில் திருமணநாள் வாழ்த்துக்கள் நதியாமா என்று இவர் கேப்ஷன் கொடுத்திருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications