"அதை நான் சொல்லவில்லை” விளக்கம் கொடுத்த அஸ்வின்... ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள்
சென்னை: கோட் சூட் போட்டபடி கலக்கலாக புன்னகைத்து தன்னுடைய புகைப்படங்களுக்கு அஸ்வின் வேற லெவலில் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
பல நாட்களுக்குப் பிறகு அஸ்வினுடைய போஸ்ட் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்ததும் அவருடைய ரசிகர்கள் ஹேப்பி ஆகி லைக்குகளை போட்டி போட்டு குவித்து வருகிறார்கள்.
தன்னை தேடும் ரசிகர்களுக்காக மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக துவங்கி இருக்கும் அஸ்வின் நீங்கள் உண்மையில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்ய முயற்சிப்பதை விட்டு விடாதீர்கள் என்று தத்துவத்தை உதிர்த்து இருக்கிறார்.

சிறப்பான பிளாட்பாரம்
குக் வித் கோமாளியில் நிகழ்ச்சி பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் அது நல்ல பிளாட்பார்மை அமைத்துக் கொடுத்தது அந்த நிகழ்ச்சி.அதில் கொஞ்சம் பெரிய பிளாட்பார்ம்மாகவே அஸ்வினுக்கு அமைந்தது. அஸ்வினும் அதை பயன்படுத்தி கொஞ்சம் சின்சியர் ஆகவே ஒர்க் பண்ண ஆரம்பித்தார். அதன் காரணமாக அடுத்தடுத்த அவரது ஆல்பம் சாங்களும் ஹிட்டானது. திடீரென்று அவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் குறிப்பாக ரசிகைகள் கூட்டம் சமூக வலைதளம் அதிகரிக்க ஆரம்பித்தது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
சமூக வலைதளங்களில் இவருக்கு இருக்கும் ஆதரவை பார்த்த இயக்குனர்கள் இவரை தங்கள் படங்களில் புக் செய்ய ஆர்வம் காட்டினர்.ஒரு வழியாக தனது கனவான சினிமா ஹீரோ அந்தஸ்தை "என்ன சொல்ல போகிறாய்"படத்தின் மூலம் நிறைவேற்றி தனது கனவை அடைந்தாலும் அதனை முழு மகிழ்ச்சியோடு அனுபவிக்க முடியாத நிலையில் தற்போது தவித்துக் கொண்டிருக்கிறார்.

பிரச்சனையை துவங்கிய பிரஸ் மீட்
அதற்குக் காரணம் என்ன சொல்ல போகிறாய் பட பிரஸ் மீட்டில் அவர் பேசிய பேச்சுக்கள். இயக்குனர்கள் கதை சொல்லும் போது தூங்கி விட்டதாகவும் தூங்காத கதையை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து இருப்பதாகவும் அவர் கூறியதை பெரிய விமர்சனத்துக்கு உள்ளாகி விட்டனர். தன் பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்தும் அந்தப் பேச்சின் தாக்கம் அவரை இன்னும் முழுவதாக விட்டபாடில்லை.

கேப்ஷன்
பல பிரச்சனைகளுக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் சமீபகாலமாக மீண்டும் அஸ்வின் ஆக்டிவாக இருந்து வருகிறார். இது இவருடைய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த விஷயம் என்று பலரும் கூறி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் மீண்டும் பழையபடி அஸ்வின் தன்னுடைய திரை பயணத்தை தொடங்க வேண்டும் என்பது ரசிகர்களுடைய ஆசையாக இருந்து வருகிறதாம். இவரை ஒரு சில நெட்டிசன்கள் கலாய்த்து வந்தாலும் இவருக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் அஸ்வினுக்கு அறிவுரைகளை வழங்க தவறவில்லை. அதுபோலத்தான் தற்போது அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நீங்கள் உண்மையில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்ய முயற்சிப்பதை விட்டு விடாதீர்கள். அன்பும் உத்வேகமும் இருக்கும் இடத்தில் நீங்கள் தவறாக போகலாம் என்று நான் நினைக்கவில்லை- பீட்ஸ் ஜெரால்ட்" என்று கூறியிருக்கிறார். சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு இது நான் சொல்லவில்லை பீட்ஸ் ஜெரால்டு சொன்னதை உங்களுக்காக பேஸ்ட் செய்து இருக்கிறேன் என்பது போல இவர் செய்த செயல் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications