பிக் பாஸில் முதல்முறையாக பீப் சத்தம் போட வைத்த போட்டியாளர்கள்...கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: ஒவ்வொரு சீசனிலும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெறுவது போல இந்த சீசனில் நடந்த நிகழ்ச்சி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது.
இந்த சீசனில் வழக்கத்துக்கு மாறாக போட்டியாளர்கள் நடந்து கொண்டது வைரலாகி வருகிறது.
முதல்முறையாக எடிட்டருக்கு அதிக வேலை வைத்த போட்டியாளர்களை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

வாயடைத்துப் போன ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத மாதிரி தான் தற்போதைய ஐந்தாவது சீசன் ஆரம்பத்தில் இருந்து வந்தது. இந்த சீசனில் போட்டியாளர்கள் ஒரு குடும்பம் போல செயல்பட்டு வந்ததை பார்த்ததும் இந்த சீசனில் சண்டை சச்சரவுக்கு இடமே இல்லை என்று ரசிகர்கள் கூறிவந்தனர். அதுவும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து அனுசரணையாக இருந்ததை பார்த்ததும் அடடா...என்று பலர் ஆச்சரியப்பட்டு பார்த்து வந்த நிலையில் நேற்றைய எபிசோடு அனைவரையும் வாயடைக்க வைத்து விட்டது.

கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
போட்டியாளர்களின் செயல்களைப் பார்த்து வியந்து போன ரசிகர்கள் என்ன...இப்படி மாறிவிட்டார்கள் என்று புலம்பி வருகின்றனர். அதுவும் இல்லாமல் ஒரு சில போட்டியாளர்கள் இதுவரைக்கும் அமைதியாக இருந்தவர்களின் சுயரூபம் நேற்று தெரிந்து விட்டது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். வழக்கத்துக்கு மாறாக போட்டியாளர்கள் தங்களுடைய கோபத்தை வெளிக்காட்டி வந்த விதத்தை பார்த்ததும் நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்.

என்ன...அந்த பீப் சத்தம்
என்னதான் போட்டியாளர்கள் ஒருபுறமாக சண்டை போட்டுக்கொண்டு வார்த்தைகளை வசைமாரி பொழிந்து வந்தாலும் ,அதை முதல் முறையாக பீப் போட்டு பிக் பாஸ் மறைத்திருக்கிறது. இதற்கு முந்தைய சீசனில் கூட பாலாஜி மற்றும் ஆரி இடையே சண்டை வந்த நிலையில் பாலாஜி கோபத்தின் உச்சத்தில் இருந்தார் ஆனால் அப்போது கூட எந்த பீப் சத்தம் வருகிற மாதிரி வார்த்தைகளை பேசவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்து கொண்டிருக்கும்போதும் கோபத்தை நிதானமாக வெளிக்காட்டிய ஆரியைப் பார்த்து இந்த சீசனில் பலர் பெருமையாக பேசி வருகின்றனர்.

ஆக்ரோஷமான வார்த்தைகள்
இதுவரைக்கும் அமைதியின் சிகரமாக இருந்த அக்ஷரா, வருண், சிபி,நிரூப் ஆக்ரோஷத்தை பார்த்ததும் அவர்களின் கோபத்தில் கொந்தளித்து வந்த வார்த்தைகளை மறைப்பதற்காக பீப் சத்தம் போட்டதும் வைரலாகி வருகிறது. அதுவும் சில நெட்டிசன்கள் அப்படி என்னதான் இவர்கள் பேசி இருப்பார்கள் என்று கேட்டு வருகின்றனர். சில இடங்களில் பல விஷயங்களை சரியாக காட்டாமல் நேற்று எபிசோட்டில் கட் செய்து விட்டார்கள் என்று பலர் பீல் பண்ணி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications