குக்...கூ...மா..குழந்தையாக மாறிய அக்ஷரா...கண்கலங்கும் போட்டியாளர்கள்
சென்னை: இன்றைய முதல் ப்ரமோவை பார்த்து இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியதும் போட்டியாளர்கள் ஆளாளுக்கு கண்கலங்க தொடங்கிவிட்டார்கள்.
முதலாவதாக அக்ஷராவின் ஃபேமிலி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்து விட்டது.

தொடங்கிய ஃப்ரீஸ் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பல நேரங்களில் கண் கலங்கவும், உணர்ச்சி வசப்படவும் வைக்கும் டாஸ்க்குகளில் ஒன்றாக ஃப்ரீஸ் டாஸ்க் இருந்து வருகிறது. இந்த டாஸ்க் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். கடந்த ஒரு சில வாரங்களாகவே இதில் யாருடைய பெர்பாமன்ஸ் எப்படி இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களையும் எதிர்பார்ப்புகளாக வெளிக் காட்டிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வாரத்தில் ரசிகர்கள் ஆர்வமான இருந்த டாஸ்க் தொடங்கிவிட்டது.

மிரட்டிய முதல் ப்ரமோ
முதல் சீசனில் இருந்து கடைசியாக ஒளிபரப்பாகிய நான்காவது சீசன் வரைக்கும் ஒரு சில போட்டியாளர்களின் ஃபேமிலி வருகை இப்ப வரைக்கும் ரசிகர்களால் மறக்க முடியாமல் இருந்து வருகிறது. அந்த மாதிரி இந்த சீசனில் யாருடைய ஃபேமிலியின் வருகை அனைவரையும் பாதிக்கப் போகிறது என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் முதல் ப்ரமோ அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.

குழந்தையாக மாறிய அக்ஷரா
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு உலக அழகி பட்டத்தை பெற்றிருந்தாலும் தற்போது பட்டிதொட்டியெலலாம் பிரபலமாக அதுவும் இளைஞர்களை கவர்ந்து தன்வசப்படுத்தி இருக்கும் அக்ஷரா ரெட்டியின் பேமிலியின் வருகை முதல் ப்ரமோவில் அனைவரையும் கண் கலங்க வைத்துவிட்டது. என்னதான் பிரபஞ்ச அழகியாக பட்டங்களை வாங்கி பல அனுபவங்கள் இருந்தாலும், இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் குழந்தைத்தனமாக அடிக்கடி நடந்துகொள்கிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொண்டிருந்தனர். தற்போது தன்னுடைய குடும்பத்தை பார்த்ததும் அப்படியே குழந்தையாக மாறி இருக்கிறார்.

பாச போராட்டம் தொடங்கிவிட்டது
அக்ஷராவின் செல்ல பெயரான குக்கூ என்று அவருடைய அம்மா அழைத்ததும் கண் கலங்கியபடி எங்க அம்மா இங்கே தான் இருக்கிறார் என்று எல்கேஜி குழந்தை அழுவது போல இவர் அழுவதை பார்த்து அனைத்து போட்டியாளர்களும் உறைந்து போயிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் அவருடைய எவர்கிரீன் ஹீரோவான அவருடைய அண்ணா இந்த நிகழ்ச்சியில் வந்ததும் கட்டி பிடித்தபடி தன்னுடைய பாசத்தையும், அவரை எவ்வளவு மிஸ் பண்ணுகிறேன் என்பதையும் காட்டியுள்ளார். இவர்களின் பாச போராட்டத்திற்கு மேலும் மெருகூட்டும் விதமாக பிக் பாஸ் ப்ரமோவில் 'உன் கூடவே பிறக்கணும்' எனும் பாடல் ஒளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் ரசிகர்களும் உணர்ச்சிவசப்பட்டு போய் இருக்கிறார்களாம்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications