காடர்களுக்குப் போட்டியாக பிரச்சனைகளை கிளப்பும் வேடர்கள்..இப்பதான் விளையாட்டு சூடு பிடிச்சிருக்கு..

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்களும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நேற்றுவரை லா...லா..லா..என்று பாடிக் கொண்டிருந்த வேடர்கள் இப்போ போர் கொடியை தூக்கி விட்டார்கள்.
எப்போதுமே பாசத்தை பிழிந்து கொண்டு இருந்தால் நன்றாக இருக்காது என்று தெரிந்து கொண்டார்களா??இல்லை இந்த கோபம் உண்மையிலே வந்துவிட்டதா என என தெரியாமல் ரசிகர்கள் குழம்புகிறார்கள்.

காடர்களில் விஜே பார்வதி என்றால் அவருக்கு சளைத்தவர் அல்ல என்று வேடர்களின் ஐஸ்வர்யா கிளம்பிவிட்டார் .

ஆட்டம் ஆரம்பம்

ஆட்டம் ஆரம்பம்

ஒருபுறம் போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து பிரபலமாகி வரும் நிலையில் இன்னொரு புறம் தங்களுடைய எடக்கு மடக்கான கோபங்களையும் குணத்தையும் காட்டி போட்டியாளர்கள் ஒருசிலர் பிரபலமாகி வருகின்றனர். அதில் இரு தினங்களாக விஜே பார்வதி போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பாடாய் படுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது நானும் வருகிறேன் என்று காயத்ரியும் கிளம்பிவிட்டார். ஏற்கனவே பார்வதிக்கு மீம்ஸ்களை போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கும் மீம்ஸ் கிரியேட் டர்கள் தற்போது காயத்திரிக்காவும் மீம்ஸ்களை ரெடி செய்து விட்டனர்.

இந்திரஜாவின் திறமையின் மீது சந்தேகம்

இந்திரஜாவின் திறமையின் மீது சந்தேகம்

ஏற்கனவே நேற்று இவர் இந்திரஜா சங்கரை பற்றி பேசியது ரசிகர்களின் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் இந்திரஜா வேலை எல்லாம் நன்றாக தான் செய்கிறார், ஆனால் போட்டியில் அசத்துவாரா??என்றுதான் தெரியவில்லை என்று இவர் பேசியதை கேட்டு ரசிகர்கள் ஷாக் அடைந்திருக்கின்றனர். அதுவும் இந்திரஜாவின் ரசிகர்கள் செம காண்டில் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று இவர் சொன்னதை அவர் டீமில் இருக்கும் ஆண்கள் செய்யாததை பார்த்து காண்டாகி தனியே நடந்து கொண்டிருக்கிறார். இவருடைய இந்த கேரக்டரை பார்த்து சமாதானம் செய்யும் விக்ராந்த் பேச்சை கண்டுகொள்ளாமல் இவர் செஞ்சு கொண்டு இருப்பதை பார்த்ததும் சக போட்டியாளர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து இருக்கத்தான் செய்கிறார்கள்.

ப்ரோமோ மிரட்டுது

ப்ரோமோ மிரட்டுது

இந்த ஐந்தாவது நாள் நடைபெறும் இந்த ப்ரோமோ வில் இவர் எதற்காக கோபப்படுகிறார் என்று சரியாக தெரியாவிட்டாலும் இவர் எதையோ கம்பை வைத்து உடைத்து விடலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு ஒரு போட்டியாளர் அப்படி கட்டையை வைத்து உடைப்பது எளிதல்ல என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டதும் காயத்ரியின் முகம் சட்டென சுருங்கி விட்டது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்த இடத்தில் நிற்காமல் விறுவிறுவென நடந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்ததும் விக்ராந்த் மற்றும் சக போட்டியாளர்கள் இவரை சமாதானப் படுத்திக் கொண்டிருக்கின்றனர். இது நமக்காக செய்யவில்லை பெண்களுக்காக அதுவும் இவர்களுக்காக தானே செய்கிறோம் என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே சரண் இடையில் போனால் போகட்டும் என்று விட்டுவிடுங்கள் என கூறியிருக்கிறார். இதைக்கேட்டதும் ஐஸ்வர்யா செம காண்டாகி விட்டார்.

என்னாச்சி...திடீர் கோபம்

என்னாச்சி...திடீர் கோபம்

அதில் விக்ராந்தின் பேச்சைக் கேட்ட ஐஸ்வர்யா உங்கள் பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அடாவடியாக கூறிவிட்டார். இதைக் கேட்டதும் நான் என்னுடைய பேச்சை நிறுத்த வேண்டும் என்று விக்ராந்த் பதிலுக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் காடர்கள் டீமில் தான் இப்படி ஒரு சில சலசலப்புக்களும் பிரச்சனைகளும் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆனால் வேடர்கள் டீம் ஒருவருக்கு ஒருவர் அனுரசனையாக இருந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இவர்கள் சண்டை போட்டுக்கொள்ளும் ப்ரோமோ இன்ஸ்டாகிராமில் செமையாக வைரலாக வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் அப்போ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சளைத்தவர்கள் அல்ல என்று சர்வைவர் நிகழ்ச்சி நிரூபித்து வருகிறதா? என்று கேட்டு வருகின்றனர்.

அது அப்படி. .இது இப்படியா??

அது அப்படி. .இது இப்படியா??

வீட்டுக்குள்ளேயே டாஸ்க் செய்து கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அது பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே காட்டில் டாஸ்க் செய்துகொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அது சர்வைவர் வேறு ஒன்றும் புதுசாக இல்லை என்று கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். எப்படியோ புதுமையை விரும்பும் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் புதுமையாக இருந்தாலும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சீசன்களில் இதே கலவரத்தை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் அலுப்பு தட்ட தான் செய்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+