உருட்டால் வந்த பிரச்சனைக்கு உருட்டே ஆறுதல்... அஸ்வினுக்கு மகிழ்ச்சி செய்தி
சென்னை: "என்ன சொல்லப் போகிறாய்" பட பிரஸ் மீட்டில் சர்ச்சைக்குள்ளாகும் விதத்தில் பேசி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட அஸ்வினுக்கு அடுத்து அடுத்து கொஞ்சம் ஆறுதலான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த மாதிரி ஆறுதலான செய்திகள் அவரை துவளவிடாமல், தன் பணியை மீண்டும் உற்சாகத்துடன் சிறப்பாக செய்ய நல்ல பூஸ்டராக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
விஜய் டிவியில் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி என்ற ஒரே ஷோ பல நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளது.

சிறப்பான பிளாட்பாரம்
குக் வித் கோமாளியில் நிகழ்ச்சி பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் அது நல்ல பிளாட்பார்மை அமைத்துக் கொடுத்தது அந்த நிகழ்ச்சி.அதில் கொஞ்சம் பெரிய பிளாட்பார்ம்மாகவே அஸ்வீனுக்கு அமைந்தது. அஸ்வினும் அதை பயன்படுத்தி கொஞ்சம் சின்சியர் ஆகவே ஒர்க் பண்ண ஆரம்பித்தார். அதன் காரணமாக அடுத்தடுத்த அவரது ஆல்பம் சாங்களும் ஹிட்டானது. திடீரென்று அவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் குறிப்பாக ரசிகைகள் கூட்டம் சமூக வலைதளம் அதிகரிக்க ஆரம்பித்தது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
சமூக வலைதளங்களில் இவருக்கு இருக்கும் ஆதரவை பார்த்த இயக்குனர்கள் இவரை தங்கள் படங்களில் புக் செய்ய ஆர்வம் காட்டினர்.ஒரு வழியாக தனது கனவான சினிமா ஹீரோ அந்தஸ்தை "என்ன சொல்ல போகிறாய்"படத்தின் மூலம் நிறைவேற்றி தனது கனவை அடைந்தாலும் அதனை முழு மகிழ்ச்சியோடு அனுபவிக்க முடியாத நிலையில் தற்போது தவித்துக் கொண்டிருக்கிறார்.
Recommended Video

பிரச்சனையை துவங்கிய பிரஸ் மீட்
அதற்குக் காரணம் என்ன சொல்ல போகிறாய் பட பிரஸ் மீட்டில் அவர் பேசிய பேச்சுக்கள். இயக்குனர்கள் கதை சொல்லும் போது தூங்கி விட்டதாகவும் தூங்காத கதையை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து இருப்பதாகவும் அவர் கூறியதை பெரிய விமர்சனத்துக்கு உள்ளாகி விட்டனர். தன் பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்தும் அந்தப் பேச்சின் தாக்கம் அவரை இன்னும் முழுவதாக விட்டபாடில்லை.

மகிழ்ச்சியான செய்தி
என்ன சொல்ல போகிறாய் படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்த 'உருட்டு' என்ற பாடல் யூ டியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது குறித்து மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் இசையமைப்பில் சிவாங்கி- சான்டிஸ் உடன் விவேக் மெர்வினும் இணைந்து பாடியுள்ளனர் .ஒரு புதுமுக நடிகரின் பாடல் குறுகிய நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை நிகழ்த்தி இருக்கிறது என்றால் ரசிகர்கள் இவருக்கு எந்த அளவிற்கு ஆதரவு அளித்து வந்திருப்பார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள்..!! இவ்வளவு பெரிய ரசிகர்களின் ஆதரவை தான் தன் ஒரே பேச்சின் மூலம் கொஞ்சம் குறைத்துக் கொண்டார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications