பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலஹாசன் வாங்கிய மொத்த சம்பளம்!? வெளியான தகவல்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் எப்போதும் போல கமலஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிலையில் இந்த சீசனில் 15 எபிசோடுகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருக்கும் நிலையில் அவர் இந்த சீசனில் வாங்கிய சம்பள விவரங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இதற்கு முன்பு தொகுத்து வழங்கிய சீசன்களை விடவும் இந்த 6வது சீசனுக்கு கமல் அதிகமாக தொகை சம்பளமாக பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

சரியான நபர்
பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து மொழிகளில் கிடைக்கும் ஆதரவு காரணமாகவே தமிழில் ஆரம்பமானது. தமிழில் முதல் முறையில் ஆரம்பமாகும் போது இது எப்படி இருக்க போகிறது, இதையெல்லாம் பார்க்க மாட்டார்கள் என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் பரவி வந்தது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக முன்னணி நடிகர்கள் வரவேண்டும் அதுவும், திறமையாக பிரச்சனைகளை கையாளும் நபராகவும் இருக்க வேண்டும் என்று பிக் பாஸ் அணியினர் தேடி கொண்டிருக்கும்போது கமல் தான் இதற்கு சரியான நபர் என்று தேர்வு செய்து இருந்தனர்.

ஆரம்பத்தில் அதிர்ச்சி
பிற மொழிகளில் நாகர்ஜுனா போன்ற முன்னணி நடிகர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும்போது தமிழிலும் அதுபோன்ற ஒரு நபர் இருந்தால்தான் மாஸாக இருக்கும் என்று கமலை தொடர்பு கொண்டு பேசி இருக்கின்றனர். அப்போது கமல் இந்த நிகழ்ச்சிக்கு சம்மதம் தெரிவித்ததும் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் அதிர்ச்சியாக தான் இருந்தது. உலக நாயகனாக உலக அளவில் தமிழ் நடிகர்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் பெருமையை வாங்கி தந்த ஒரு நடிகர் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரே என்று ஆரம்பத்தில் பலர் கருத்து கூறி வந்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கமலும் தன்னுடைய திறமையின் மூலமாக ஒவ்வொரு வாரமும் ரசிகர்களையும் திருப்திப்படுத்தி, போட்டியாளர்களுக்கும் சரியான அறிவுரைகளை கூறி வருகிறார்.

குழந்தைகளை கவர்ந்த பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் அரசியல் தளமாகவும் பயன்படுத்தி மக்களிடம் தன்னுடைய செல்வாக்கையும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இவர் எடுக்கும் முயற்சிகள் வளர்ச்சி பெற்று தான் வருகிறது. சினிமாக்களே பார்க்காத குழந்தைகள் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலை பார்த்த பிறகு இவருடைய பெயரையே பிக் பாஸ் என்று மாற்றி விட்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கமல் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக வாங்கும் சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

மொத்த சம்பளம்
தற்போது முடிவடைய இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி மொத்தம் 15 எபிசோடுகள் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனுக்கு கமல் அதிகமாக சம்பளம் கேட்டதாக ஏற்கனவே ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இப்போது 15 எபிசோடுகளை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு ஐந்து கோடி என 15 எபிசோடுகளுக்கும் 75 கோடி சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications