மாரிமுத்து சீரியலில் கத்தி பேசிய காரணம் இதுதானா? எதிர்நீச்சல் நிஜ குடும்பத்தின் அம்மா வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். அவர் கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக காலமானார்.

அதே நேரத்தில் மாரிமுத்துவுக்கு ஏற்கனவே இதய நோய் இருந்திருக்கிறது. அதை அவர் வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறார் .இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் கத்தி பேசிக் கொண்டிருந்தது தான் அவருக்கு மாரடைப்பு வருவதற்கான காரணம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Is this the reason Marimuthu shouted in the serial? The mother of the ethirneechal real family is upset

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் உருவாவதற்கு காரணமாக இருந்த நிஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல தகவல்களை கூறி இருக்கின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் சமீபகாலமாக பாராட்டப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் பெரிய அளவில் வெற்றி பெற்று இருப்பதற்கு காரணம் குணசேகரன் என்ற கேரக்டரும் ஒன்றுதான். இந்த கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து கொண்டு இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

வில்லன் என்றாலும் அவர் வில்லனே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவருடைய நடிப்பு மற்றும் டயலாக் பேசும் திறமை அதிகமான ரசிகர்களை கவர்ந்து இருந்தது. அதோடு தன்னுடைய பார்வை மற்றும் நக்கல் தனத்தால் அதிகமான ரசிகர்களை மிரட்டவும் செய்திருந்தார். வீட்டில் இருப்பவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டாலும் அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்தது பலராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

Is this the reason Marimuthu shouted in the serial? The mother of the ethirneechal real family is upset

இந்த நிலையில் இந்த சீரியல் உருவாகுவதற்கு காரணமாக இருந்த நிஜ குடும்பம் தற்போது முதல்முறையாக பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அவர்கள் பேசும்போது இந்த சீரியலில் காட்டப்படுவது போன்று தான் நாங்கள் நான்கு பேர் அண்ணன் தம்பிகளாக இருந்தோம். எங்களுடைய அப்பா சின்ன வயதிலேயே இறந்து விட்டார். அதற்கு பிறகு அண்ணன் தான் எங்கள் எல்லோரையும் எந்த கஷ்டமும் கொடுக்காமல் வளர்த்து வந்தார்.

அப்பா இறந்ததும் எங்களை டீக்கடையிலோ பக்கத்தில் இருக்கும் ஏதாவது கடையிலோ வேலைக்கு சேர்த்து விட வேண்டும் என்று எங்க சொந்த பந்தமெல்லாம் சொன்னபோது நான் இருக்கும் வரைக்கும் என் தம்பிகளை கஷ்டப்பட விடமாட்டேன் என்று என்னுடைய அண்ணன் பல வேலைகளை செய்து எங்களை வளர்த்து வந்தார். அவரை நாங்கள் அண்ணன் என்று சொல்வதை விட அப்பா என்று சொல்லலாம் என்று பேசி இருக்கின்றனர்.

ஆரம்ப காலகட்டத்தில் தவிடு கடையில் வேலை பார்த்து பிறகு ஹோட்டல்களிலும் பஸ்ஸில் கண்டக்டராகவும் வேலை பார்த்த அந்த குடும்பத்தின் மூத்த அண்ணன் பிறகு பஸ் கம்பெனிக்கு ஓனராக மாறி இருக்கிறார். அதுபோல ஹோட்டல் ஓனராகவும் மாறி தன்னை அவமானப்படுத்திய சொந்த பந்தங்கள் முன்பு பெரிய லெவலில் பணக்காரராக மாறி இருக்கிறார்.

Is this the reason Marimuthu shouted in the serial? The mother of the ethirneechal real family is upset

இதுபோல நடிகர் மாரிமுத்து சீரியலில் பேசுவது போன்று தான் அந்த சீரியல் உருவாகுவதற்கு காரணமாக இருந்த குடும்பத்தின் மூத்த அண்ணனும் பேசுவாராம். தான் கறாராக பேசுவதற்கு காரணம் நான் பலரை வேலைக்கு வைத்து பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன். அவர்களிடம் கொஞ்சம் கண்டிப்பாக பேசினால் தான் அங்கே வேலை நடக்கும். ஆனால் என்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு என்னுடைய குணம் நன்றாகவே தெரியும். வெளியில் தான் நான் கரடு முரடாக இருப்பேன். உள்ளே ரொம்பவும் பாசக்காரன்தான் என்று அந்த குடும்பத்தின் மூத்த அண்ணன் பேசியிருக்கிறார்.

அதுபோல இந்த குடும்பத்தில் அனைவருமே அம்மா பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டார்களாம். மூத்த அண்ணன் எல்லா முடிவுகளை எடுத்தாலும் அவர் அம்மா பேச்சுக்கு எதிராக எதுவுமே பேச மாட்டாராம். எதையும் செய்வதற்கு முன்பு அம்மாவிடம் கேட்டுவிட்டு தான் செய்வார் என்று அந்த வீட்டின் இரண்டாவது அண்ணன் கூறி இருக்கிறார்.

Is this the reason Marimuthu shouted in the serial? The mother of the ethirneechal real family is upset

அதுபோல நடிகர் மாரிமுத்து இந்த வீட்டின் மூன்றாவது தம்பியை ட்ரெயினில் சந்தித்து இருக்கிறார். அப்போது தான் வருகிற பத்தாம் தேதி உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை எல்லாம் நேரில் சந்திக்கிறேன் என்று எல்லோரிடமும் போன் செய்து பேசினாராம். ஆனால் அவர் எட்டாம் தேதி இறந்து போய்விட்டார் என்பது எங்களுக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது என்று அந்த வீட்டின் மூன்றாவது தம்பி பேசி இருக்கிறார்.

அதுபோல அந்த வீட்டின் நான்கு மகன்களின் அம்மா சீரியலில் நான் தினமும் மாரிமுத்துவை பார்ப்போம். ஆனால் அவனையும் என்னுடைய பிள்ளை போலத்தான் நான் நினைச்சேன். ஆனா அவன் இறந்து போய்விட்டது எனக்கு ரொம்பவே வருத்தமா இருந்தது என்று அந்த குடும்பத்தின் அம்மா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+