Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதவ் பிரச்சாரத்தில், கண்ணாடி பாட்டில் வீசிய பின்னணி இதுதான்! ஜூலி போட்ட புது குண்டு! அடுத்த பஞ்சாயத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்லிவாக்கம் தொகுதியில் நேற்று ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம் செய்தபோது அங்கு பெண் தொண்டர்கள் மீது மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதுகுறித்து நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஜூலி வெளியிட்ட வீடியோ விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

Julie Aadhav Arjuna Tamil Nadu Politics 2026

மது பாட்டில் வீச்சு

வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் நேற்று இரவு ஆதவ் அர்ஜுனா அங்கு பிரசாரம் செய்தார். தெருமுனை பொதுக்கூட்டம் நடந்தபோது பெண் தொண்டர்கள் மீது உடைந்த மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை தரப்பில் இரண்டு பேர் மது குடித்துவிட்டு தகராறு செய்தபோது ஒருவர் மீது ஒருவர் மது பாட்டில்களை வீசி எறிந்த போது அது பெண்கள் மீது பட்டு இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

ஜூலியின் குற்றச்சாட்டு

இதற்கு ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் ஜூலி இன்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், இன்னைக்கு ஏப்ரல் ஒன்று உலகம் முட்டாள் தினம், அதை வர்ச்சுவல் வாரியர்ஸ் என்ற வல்கர் வாரியர்ஸ்க்கு ஏற்ற நாள் தான். ஆனால் ஆதவ் அர்ஜுனா நேற்றே ஆரம்பித்து விட்டார் போல.

விஜயால் இப்போ இன்னொரு உயிர் போயிடுச்சு.. அவர் பங்க்ஷன் வீட்டுக்கு போறாரு! ஆனா இவங்க? விடாமல் அடிக்கும் ஜூலி
அண்ணே நேற்று நீங்க பண்ணினது ரொம்ப பழைய ஆர்எஸ்எஸ் டெக்னிக். வட இந்தியாவில் தான் ஆர்எஸ்எஸ் இதுபோல ட்ரெயின் முன்னாடி இஸ்லாமியர்கள் போல தொப்பி போட்டுட்டு கல்லை தூக்கி எறிஞ்சு போராட்டம் என்கிற பெயரில் பிரச்சனை பண்ணுவாங்க. அதற்குப் பிறகு போலீஸ் விசாரணை செஞ்சு பார்த்தா தான் அவங்க ஆர்எஸ்எஸ் காரங்க என்பது தெரியவரும். தவெக கட்சியில் இருக்கும் பல பேர் ஆர்எஸ்எஸ் காரங்க அதனால் அதே பழைய டெக்னிக்கை இப்போ நீங்க கையாளுகிறீங்க.

ஜூலி வெளியிட்ட வீடியோ

நீங்களே கண்ணாடி பாட்டிலை வீசிட்டு, நீங்களே பொங்குறீங்க. திமுக கட்சி சார்ந்த எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. எங்களுக்கு எலக்சன் வந்தாலே திருவிழா தான். நாங்க இதுவரைக்கும் செய்த சாதனைகளை எல்லாம் மக்கள் மத்தியில் சொல்லி வாக்கு சேகரிச்சிட்டு இருக்கிறோம். எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. இதுல குறுக்கா, மறுக்கா நீங்க வேற ஓடிக்கிட்டு இருக்கீங்களே.. எதுக்காக அண்ணே? என்று கலாய்த்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இதுதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்ததும் வழக்கம் போல தவெக கட்சியினர் ஜூலியை திட்டி தீர்த்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் குறித்து பல வீடியோக்களை வெளியிட்டு வந்த ஜூலி இப்போது ஆதவ் அர்ஜுனா பற்றியும் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

சோசியல் மீடியாவில் சண்டை

ஜூலி முதல் முறையாக விஜய் ஜல்லிக்கட்டு காளை பற்றி சொன்ன குட்டி ஸ்டோரியை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அப்போது அவரை சோசியல் மீடியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் திட்டி தீர்த்து ரீல்ஸ் வெளியிட்டு வந்தனர். இதனால் சலிப்படையாமல் தன்னை பற்றி விமர்சனங்களுக்கும் கலாய்ப்புகளுக்கும் அடுத்தடுத்து ஒவ்வொரு வீடியோக்களில் ஜூலி பதிலடி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

பெரம்பூரில் பிரச்சாரம்

ஏற்கனவே வெளியிட்ட வீடியோவில் விஜய் எந்த இடத்தில் போட்டு இடுகிறாரோ அதே இடத்தில் நான் என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவேன் அவருக்கு எதிராக பேசிக் கொண்டே இருப்பேன் என்று பேசி இருந்தார். அதேபோல விஜய் பெரம்பூரில் போட்டியிடுகிறேன் என்று அறிவித்த அடுத்த நாளே அங்கே தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி விட்டார். ஆனால் சோசியல் மீடியாவிலும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இதனால் ஜூலி பற்றிய விமர்சனங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+