நடிகர் ஜூனியர் பாலையா பேரன் யார் தெரியுமா? கயல் சீரியல் ஹீரோ தான்! இத்தனை தொடரில் நடித்திருக்கிறாரே?
சென்னை: பழம்பெரும் நடிகர் டி.எஸ். பாலையாவின் மகனான ஜூனியர் பாலையா 2023 ஆம் ஆண்டு காலமானார். அவருடைய பேரன் சன் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்ட வீடியோ தான் இப்போது பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் பழம்பெறும் நடிகர்கள் ஒரு சிலரை இப்போதைய ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் நடிகர் பாலையா எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களுடன் நடித்திருக்கிறார். அப்போது பாலையா நாடகங்களில் நடித்து பிறகு சினிமாவிற்குள் நுழைந்ததால் நடிப்பில் அத்துபிடியாக இருந்திருக்கிறார். வில்லன், காமெடியன், குணச்சித்திர வேடம் என எது கொடுத்தாலும் அதில் தன்னுடைய பெஸ்ட்டை கொடுத்து இருக்கிறார்.

பாலையாவிற்கு மூன்று மனைவிகள், மொத்தம் ஏழு பிள்ளைகளாம். அதில் ஒருவர் தான் ரகு. அவரும் தன்னுடைய அப்பாவை போலவே எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசால்டாக நடித்து விடுவாராம். அதனாலே பிறகு தன்னுடைய பெயரை ஜூனியர் பாலையா என்று மாற்றி இருக்கிறார். நடிகர் கமல் நடித்த மேல்நாட்டு மருமகள் படத்தின் மூலமாகத்தான் ஜூனியர் பாலையாவிற்க்கு ஒரு பிரபலம் கிடைத்திருக்கிறது.
அதற்கு பிறகு கமலுடன் நடித்த வாழ்வே மாயம், சிவாஜி நடித்த தியாகம் என பல படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்திருக்கிறார். அடுத்ததாக கோபுர வாசலிலே படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அந்த படத்தில் கார்த்திக், சார்லி, நாசர், ஜனகராஜ் உடன் இவரும் நண்பராக நடித்து இருப்பார். பிறகு கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தில் ஜூனியர் பாலாவும் ஒருவராக நடித்திருந்தார்.

ஜூனியர் பாலையாவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது என்றால் அது சுந்தர காண்டம் என்ற படம் தான். அந்த படத்தில் பாக்கியராஜ் சண்முகமணி என்று இவரை அழைப்பார். அதற்கு பிறகு பாக்யராஜ் உடன் பல படங்களில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் சமுத்திரக்கனியின் சாட்டை, அஜித்துடன் நேர்கொண்ட பார்வை போன்ற படங்களிலும் நடித்து இப்போதைய தலைமுறையினருக்கும் தெரிந்த ஒரு முகமாக இருந்தார்.
பாலையா வெள்ளித் திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சித்தி சீரியலில் விஸ்வநாதன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல சின்ன பாப்பா பெரிய பாப்பா மட்டும் அல்லாமல் இன்னும் ஒரு சில சீரியல்களிலும் நடித்திருந்தார். ஆனாலும் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காலமானார். அவருடைய பேரன் இப்போது சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜூனியர் பாலையாவின் பேரன் வேறு யாரும் இல்லை. கயல் சீரியலில் கதாநாயகனின் பிரண்டாக நடித்த மோகித் பாழையா தான். இவர் ஏற்கனவே சந்திரலேகா மற்றும் பூவா தலையா சீரியலிலும் நடித்திருக்கிறாராம். இது பற்றி மோகித் பேசும்போது நான் கயல் சீரியலில் நடிக்கும் போது எனக்கு ரொம்பவும் பெரிய பிரபலம் கிடைத்தது. பொதுவாக சீரியல்களில் நடிக்கிறோம் என்றாலே அது எளிமையாக மக்கள் மனதில் இடம் கிடைத்துவிடும்.

அதேபோல எனக்கு கயல் சீரியலில் நடிக்கும் போது ஹீரோ உடைய பிரண்டுக்கும், ஹீரோவுக்கும் எனக்கும் அதிக காட்சிகள் இருக்கும் என்றும், ஹீரோவின் அப்பாவோடு காமெடி காட்சிகள் இருக்கும் என்றும் சொன்னார்கள். அது போலவே இருந்தது. பிறகு ஹீரோவின் உறவுக்கார பெண்ணை கல்யாணம் பண்ணுவது போலவும் எனக்கு கேரக்டர் மாதிரி இருக்கிறது.
இந்த சீரியல் எனக்குன்னு ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. ஆனாலும் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும்போது பல ஏமாற்றங்கள் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. வாய்ப்பு கேட்க போகும் இடமெல்லாம் ஜூனியர் பாலையா பேரன் என்று எல்லோரும் அடையாளப்படுத்துகிறார்கள். இதனால் ஒரு சிலர் நம்மிடம் நல்லா பேசினாலும் சிலர் இவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணுமா? என்பது போலவே யோசிக்கிறார்கள் என்று வருத்தத்தையும் மோகித் பகிர்ந்து இருக்கிறார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications