திருமணத்திற்கு பிறகு சினேகன் ரொம்பவே மாறிவிட்டார்...உண்மையை உடைத்த கன்னிகா
சென்னை: வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் கன்னிகா தன்னுடைய கணவர் சினேகனைப் பற்றிய உண்மைகளை கூறியிருக்கிறார்.
பாடலாசிரியராக பலருக்கும் தெரிந்த சினேகனின் மறுபக்கம் தற்போது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.

இவ்வளவு திறமைகளா
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்திருக்கும் கன்னிகா ரவி தன்னுடைய காதல் கணவரான சினேகன் பற்றி தற்போது மனம் திறந்து பேசியிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா ரவி அடிக்கடி தன்னுடைய கணவர் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் தான் அதிகமாக பேசி வருகிறார். கன்னிகாவிற்குள் பல திறமைகள் மறைந்து இருக்கிறது. அவர் ஒரு சமூக ஆர்வலராகவும், நடிகையாகவும், மாடலாகவும், அழகி பட்டம் பெற்ற மாடலாகவும், புத்தக எழுத்தாளராகவும், சமையல் ஆர்வலராகவும் பல்வேறு திறமைகளை தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் கன்னிகா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அடிக்கடி பேசும் வார்த்தைகள்
சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான கன்னிகா திருமணத்திற்குப் பிறகு மீண்டும் தற்போது வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கி இருக்கின்றார். இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் தான் பாடலாசிரியர் சினேகன் உடன் திருமணம் முடிந்திருந்தது. திருமணத்திற்குப் பிறகு அதிகமான ரசிகர்கள் இவரிடம் சினேகனைப்பற்றி கேள்விகளை எழுப்பி வருகிறார்களாம்.
அது மட்டுமல்லாமல் சினேகன் மற்றும் கன்னிகா இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் அதைப் பற்றியும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் தன்னுடைய கணவர் திருமணத்திற்கு முன்பு இருந்ததைவிட தற்போது அதிகமாக மாறிவிட்டார் என்று கன்னிகா கூறியிருக்கிறார்.

இது வேற நடந்து இருக்கா
கிராமத்திலிருந்து கன்னிகா சென்னையில் நடிகை ஆகவேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்த புதிதில் அவருக்கு அனைத்துமே புதுமையாகத் தான் இருந்திருக்கிறது. இவருக்கு திறமைகள் இருந்தாலும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் இருந்த நிலையில் ஒரு நண்பராகவும் வெல்விஷராகவும் இவருக்கு இருந்தது சினேகன் தானாம். தற்போது வரைக்கும் கன்னிகாவிற்கு ஒரு பாதுகாவலராகவும் நண்பராகவும் தான் இருந்து வருகிறாராம். பல விஷயங்கள் கன்னிகாவிருக்கு எடுத்துக்கூறி இந்த சமுதாயத்தில் வாழும் அளவிற்கு மாற்றி இருக்கிறாராம். யாரிடம் எப்படி பேச வேண்டும் பழக வேண்டும் என்பன பற்றி பலமுறை பாடம் எடுத்திருக்கிறாராம். ஒரு சில நேரங்களில் இவர் செய்யும் சிறு சிறு தவறுக்காக திருமணத்திற்கு முன்பே கன்னிகா சினேகனிடம் அடியும் வாங்கி இருக்கிறாராம்.

மாறிய குணம்
திருமணம் முடிந்த பிறகு சினேகன் ரொம்பவே மாறி விட்டாராம். அவருடைய கேரக்டரில் அமைதி அதிகமாக இடம்பிடித்துக் கொண்டது என்று கன்னிகா மட்டுமல்லாமல் சினேகன் உடன் பழகிய பல நண்பர்களும் இதே தான் கூறி வருகிறார்கள். திருமணத்திற்கு முன்பு எதற்கும் கோபப்படும் சினேகன் தற்போது கோபத்தை அதிகமாக குறைத்துக் கொண்டது கன்னிகாவிற்க்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கன்னிகாவை ஒரு குழந்தை போல தான் சினேகன் பார்த்து வருகிறாராம். தெரியாத பல விஷயங்களை தெளிவாக எடுத்துரைத்து கன்னிகாவை பார்த்து பார்த்து காதலித்து வருகிறாராம். இதனால் கன்னிகா அதிகமாக மகிழ்ச்சியாகவும், தைரியமாகவும் இருப்பதாக கூறியிருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications