கண்ணை மூடி நடனத்தால் கருத்து சொன்ன அனிதா...குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: தனக்குள் இருக்கும் திறமையை வாராவாரம் நிரூபித்துக் கொண்டிருக்கும் அனிதாவுக்கு இந்த வாரம் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனத்தால் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அனிதாவின் இந்த வார பர்பாமன்ஸ் தான் அவருடைய ரசிகர்களால் ஆவலாக பேசப்பட்டு வருகிறது.
கருத்து சொல்வது எல்லாம் எளிது அதன்படி நடப்பது தான் கடினம் என்பதை தற்போது அனிதா நிரூபித்துவிட்டார்.

வைரலாகும் லேட்டஸ்ட் ப்ரோமோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இந்த வாரம் ப்ரோமோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு ஜோடி தங்களுடைய திறமையை நிரூபித்து நடுவர்களின் பாராட்டை மட்டுமல்லாமல் ரசிகர்களின் பாராட்டையும் பெற்று வருகிறது. அதில் பல வாரங்கள் இந்த பாராட்டுகளைப் பெற்று வந்து அனிதா மற்றும் ஷரிப் ஜோடியும் அசத்தி விட்டது. இவர்கள் நடனத்தில் மட்டுமல்லாமல் தங்களுடைய திறமையிலும் வித்தியாசமானவர்கள் என்பதை ஒவ்வொரு வாரமும் அனைவருக்கும் வெளிக் காட்டி வருகின்றனர். இதனாலேயே இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய நடனத் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

கடினமான உழைப்பு தான்
ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் புதிதுபுதிதாக டாஸ்க்குகள் இருப்பது வழக்கம்தான். ஆனால் இந்த வாரம் அடி தூள் பண்ணியிருக்கும் அனிதாவின் பர்பாமன்ஸ் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நான்கு சீசனிலும் கலந்து கொண்ட பல கண்டஸ்டன்கள் இதில் ஜோடிகளாக ஆட்டம் போட்டு வருகின்றனர். இதில் ஒரு சிலர் வெளியேறி விட்டாலும் இருக்கும் கன்டஸ்டன்கள் தங்களுடைய திறமையை ஒவ்வொரு வாரமும் மெருகேற்றி அனைவரையும் அதிசய பட வைத்துவிட்டார்.

அனிதாவின் இன்னொரு முகம்
பிக்பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இந்த வாரம் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்னும் சுற்றில் பார்வை இல்லாதவர்களின் மனநிலைகளையும் அவர்களின் திறமையையும் தத்துரூபமாக காட்டி அனிதா அசத்திவிட்டார். கண்களில் பேண்டேஜ் ஓட்டிக்கொண்டு கொஞ்சம் கூட கண் தெரியாத அளவில் இருந்தாலும், தன்னுடைய கடின முயற்சியினால் இந்த வாரம் அசத்தி இருக்கிறார். ஏற்கனவே இவர்களின் ஆட்டம் பலருக்கு பிடித்ததாகவே இருந்து வருகிறது. ஏன் என்றால் ஒவ்வொரு வாரமும் ஒரு சமுதாய கருத்துகளை இவர்களுடைய நடனத்தில் வெளிக்காட்டி வருவது இவர்களுக்கு மேலும் ஒரு சிறப்பாக அமைந்து வருகிறது. அதில் இதுவரைக்கும் வந்த எபிசோடுகள் எல்லாவற்றையும் விடவும் இந்த வார எபிசோடுகள் தான இவர்களின் நடனத்திற்கு பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கிறது.

நல்ல சமுதாய சிந்தனை
பிக்பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் ப்ரோமோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் போஸ்ட் செய்த அனிதா அதற்கு ஒருவிரிவான கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். அதில், "நாங்களும் சரி எங்கள் டீமும் சரி கொஞ்ச நஞ்ச மெனக்கெடல் இதற்காக படவில்லை, பல நாட்கள் உறக்கம் இல்லாமல் பயிற்சி பெற்றிருக்கிறோம். பார்வையின்றி ஆட துணிந்து எடுத்த முயற்சி தான் இது. ஜீரோ சதவீதம் கண்பார்வையில் மொத்த நடனமும் ஆடி இருக்கிறோம். என்னுடைய கோரியோகிராபர் இல்லாமல் இது சாத்தியமே இல்லை. இதற்கு பெரிய பெரிய நன்றிகள்" என்று கூறியிருக்கிறார். அனிதாவின் இந்த போஸ்ட் பார்த்து அசந்து போன ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை மட்டுமல்லாமல் ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் உண்மையிலேயே வியந்து பார்த்து பாராட்டக்கூடிய தருணம்தான் நடனம் என்பதுதான் ஆனால் அதில் மாறுபட்ட நிகழ்வுகளை நிகழ்த்திக் மற்றவர்களுக்காக தங்களை வருத்திக்கொண்டு நடனங்களை பல்வேறு வகையநடனங்களை வெளிக்கட்டி அனைவரையும் ரசிக்க வைப்பது மட்டுமல்லாமல் கருத்துக்களையும் கூறியிருக்கிறார்கள் இந்த மனதுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications