மீண்டும் பள்ளிக்கு அழைத்து செல்லும் பிக் பாஸ்...இன்று சேட்டைக்கு பஞ்சம் இருக்காது போல
சென்னை: அடிக்கடி அழுகை சீன்களை காட்டிக்கொண்டிருந்த பிக்பாஸ் இன்று அனைவரின் மனதும் தேடும் இடத்தை காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
யாராலும் மறக்க முடியாத பள்ளிப் பருவத்தை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறது பிக் பாஸ் ப்ரமோ.
சும்மாவே ஆட்டம் போடும் போட்டியாளர்கள் இன்று டாஸ்க்கு என்று வந்ததும் என்ன செய்யப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டது.

இன்று என்டர்டைன்மென்ட் தானா??
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில போட்டிகள் ரசிகர்களை கவர்ந்து விடும். அந்த மாதிரி தான் இன்றைய பள்ளி பருவங்களை நினைவுகூறும் கனா காணும் காலங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதை பார்த்ததும் ரசிகர்கள் இன்று வேற லெவல் என்டர்டைன்மென்ட் இருக்கிறது என்று நிகழ்ச்சிக்காக இப்போதே ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அடிக்கடி அழுகை சீன்களை பார்த்து போரடித்துப் போய் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த மாதிரி ஒரு என்டர்டைன்மென்ட் அடிக்கடி தேவை என்று பல கருத்துகளை கூறி வருகின்றனர்.

ஒன்றும் சொல்வதற்கு இல்லை
போட்டி என்று வந்து விட்டதும் புயலாக கிளம்பிவிடும் போட்டியாளர்கள் அப்படியே கேரக்டராக மாறிவிட்டார்கள். இவர்களைப் பார்த்ததும் ரசிகர்களுக்கு இப்போதே சிரிப்பு வந்து கொண்டிருக்கிறது. சும்மாவே பிரியங்கா போன்ற போட்டியாளர்கள் கேரக்டரோடு ஒன்று விடுகிறேன் என்கிற பெயரில் செய்யும் அக்கப்போர் அளவில்லாமல் இருக்கும். ஆனால் இப்போது குழந்தைகளாக இவர்கள் மாறி இருப்பதால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்று சிலர் கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அல்லல்படும் டீச்சர்ஸ்
அனைத்து போட்டியாளர்களும் ஸ்கூல் யூனிபார்மில் கிளம்பிவிட்டனர். அவர்களை மேனேஜ் செய்வதற்காக ராஜு, அபினய், சிபி உள்ளிட்ட ஒரு சில போட்டியாளர்கள் டீச்சர் ஆகவும் ஹெட்மாஸ்டராகவும் மாறி இருக்கின்றனர். இவர்களுடைய அதட்டலை கண்டுகொள்ளாத ஸ்டூடண்ட் போட்டியாளர்கள் செய்யும் சேட்டைகள் வேற லெவல் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் கோரிக்கை
வழக்கம்போல பிரியங்கா தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார் ஸ்கூல் டீச்சராக மாறியிருக்கும் ராஜுவின் பேச்சை கேட்காமல் இவர் செய்யும் அடாவடி பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல ரசிகர்கள் ராஜு ஸ்டூடனட் ஆக இருந்தால் நிகழ்ச்சிக்கு இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும் என்று தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். எப்படியோ இந்த ப்ரமோ ரசிகர்களை கவரும் வகையில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கின்றது. இது போல அடிக்கடி ப்ரமோவை வையுங்கள் என்று பலர் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications