Madaraasi: "நான் ஃபீல்ட் அவுட் ஆனாலும்" - அனிருத் பேச்சின் பின்னணியில் தனுஷ் - சிவகார்த்திகேயன் மோதலா? பிரபலம் ஓபன்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குந ர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் அனிருத் பேசிய பேச்சு, தமிழ் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத்தின் பேச்சு, ஒருபுறம் சிவகார்த்திகேயனுடனான அவரது ஆழமான நட்பை வெளிப்படுத்தினாலும், மறுபுறம், இந்த பேச்சின் பின்னணியில் நடிகர் தனுஷுடனான நீண்டகாலப் பகைமைதான் காரணம் என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு போன்றவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அனிருத்தின் உருக்கமான பேச்சு
அனிருத், மேடையில் பேசும்போது, "நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான். என்னுடைய முதல் பிளாக்பஸ்டர் படம் 'எதிர்நீச்சல்'. அதிலிருந்துதான் எனக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் உருவானது" என்று கூறினார். அனிருத் மேலும், "நான் ஒருவேளை ஃபீல்ட் அவுட் ஆனாலும், சிவகார்த்திகேயனின் வெற்றியை என்னுடைய வெற்றியாகத்தான் பார்ப்பேன்" என்று உருக்கமாகப் பேசினார். அனிருத்தின் இந்த பேச்சு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. என்னதான் நெருங்கிய நண்பனாக இருந்தாலும், ஒரு முன்னணி இசையமைப்பாளர் இப்படி பேசுவது தேவைதானா? என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.
செய்யாறு பாலுவின் கருத்து
பத்திரிகையாளர் செய்யாறு பாலு, அனிருத்தின் இந்த பேச்சின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் சில விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அனிருத்தின் பேச்சு தனுஷை எரிச்சலூட்டுவதற்காகவே திட்டமிட்டுப் பேசப்பட்டது என்று செய்யாறு பாலு கூறுகிறார். அனிருத் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தாத்தா ஒய்.ஜி.பார்த்தசாரதி, எம்.ஜி.ஆருக்கே நெருக்கமானவர். அப்படியிருக்க, அனிருத்தின் வளர்ச்சிக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று அவர் சொல்வது, தனுஷுடனான பழைய பகையை வெளிப்படுத்துவதற்கே.

'எதிர்நீச்சல்' படத்தை தனுஷ் தயாரித்தபோது, தன்னிடம் வேலை செய்பவர்கள் தனக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தனுஷ் எதிர்பார்த்தாராம். ஆனால், அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் தங்கள் தனிப்பட்ட பாதையில் பயணித்ததால், தனுஷ் மறைமுகமாக சிவகார்த்திகேயனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார். இதன் காரணமாக, ஒரு வைராக்கியத்தில் தனுஷின் அலுவலகத்திற்கு எதிரிலேயே சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்தைத் திறந்தார். இந்த மோதலின் தொடர்ச்சிதான், அனிருத் மேடையில் பேசியதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. ரஜினி, கமல், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்களின் வரிசையில் சிவகார்த்திகேயனையும் கொண்டு வரும் முயற்சியில் அனிருத் இறங்கியுள்ளார் என்று செய்யாறு பாலு கூறியது, திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சிவகார்த்திகேயன் பதில்
அனிருத்தின் பேச்சுக்கு மேடையில் பதிலளித்த சிவகார்த்திகேயன், "அவர் ஃபீல்ட் அவுட் எல்லாம் ஆக மாட்டார். அவருக்கு இன்னும் பல சாதனைகள் காத்திருக்கின்றன. வெற்றியை எப்படி கையாள்வது என்பதற்கு அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்" என்று கூறினார். இதே மேடையில் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், "அனிருத் தான் 'துப்பாக்கி' போன்ற பெரிய படத்திற்கு இசையமைக்க எனக்கு முதன்முதலில் வாய்ப்பு கொடுத்தார். அந்த நன்றிக்கடன் எனக்கு எப்போதும் இருக்கும்" என்று தெரிவித்தார்.
அனிருத்தின் இந்த பேச்சு, தனிப்பட்ட நட்பின் வெளிப்பாடா, அல்லது ஒரு மறைமுக அரசியலா என்பது பற்றிய விவாதங்கள் சினிமா வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications