Rangarajan: மாதம்பட்டி ரங்கராஜன் மீது ஜாய் கிரிஸில்டா மீண்டும் புகார்.. வெளிப்படையாக வைத்த இரண்டு கோரிக்கை
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜன் மீது ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகார் மீது ஏற்கனவே விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஜாய் கிரிஸில்லா மாதம்பட்டி ரங்கராஜன் மீது புகார் கொடுத்திருக்கிறார். அது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சமையல் கலைஞராகவும் நடிகராகவும் பிரபலமடைந்த மாதம்பட்டி ரங்கராஜன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கி இருந்தார். அதற்குப் பிறகு சின்னத்திரை ரசிகர்களுக்கும் பிரபலமாக இருந்தார். சோசியல் மீடியாவில் இவர் வெளியிடும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலானது. சமையலில் புதுமையாக இவர் செய்வதை பலரும் ஃபாலோ பண்ண தொடங்கினர்.

அதனாலயே பல பிரபலங்களின் வீட்டில் மாதம்பட்டி ரங்கராஜனின் சமையலில் தான் தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜாய் தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜனுக்கும் திருமண முடிந்துவிட்டது என்று போஸ்ட் போட அது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் மாதம்பட்டி ரங்கராஜனுக்கு ஸ்ருதி என்ற வழக்கறிஞருடன் திருமணம் முடிந்து இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
ஸ்ருதியும் கணவர் மாதம்பட்டி ரங்கராஜனுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜனுக்கு இரண்டாவது கல்யாணம் முடிந்து விட்டதா என்று கேள்விகள் எழுந்து வந்தது. அந்த நேரத்தில் ஜாய் தான் ஆறுமாத கர்ப்பமாக இருப்பதாகவும் தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜனுக்கும் சில வருடங்களுக்கு முன்பே கல்யாணம் முடிந்து விட்டது என்றும் போஸ்ட் போட்டு இருந்தார்.
அதற்குப் பிறகு ஜாய், ரங்கராஜன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். அதில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும் தான் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தனக்கு மிரட்டல் விடுவதாகவும் கூறியிருந்தார். இப்படியான சூழ்நிலையில் ஜாய்க்கு ஆண் குழந்தையும் பிறந்து இருந்தது.
அதைத்தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜன் இந்த திருமணம் எனக்கு கட்டாயத்தின் பேரில் தான் நடந்தது, ஆனால் குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அது என்னுடையது என்று நிரூபணம் ஆனால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுக்க கவனித்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு என்று சொல்லி இருந்தார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியீட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் சோசியல் மீடியாவில் ஜாய் மாதம்பட்டி ரங்கராஜனை கிண்டல் செய்வது போலவும் கலாய்ப்பது போலவும் போஸ்ட் போட்டு கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் ஜாய், மாதம்பட்டி ரங்கராஜன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் கொடுத்திருக்கிறார். அதில் மாதம்பட்டி ரங்கராஜன் மீது ஜாமினில் வர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் நான் குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்தம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. அதனால் என்னுடைய இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள பணம் தேவைப்படுகிறது. எனவே இந்த விவாகரத்தில் விரைவில் நல்ல தீர்வை எட்ட போலீசார் உதவி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications