எல்லாம் சொல்லி தானே கல்யாணம் பண்ணுனேன்.. கோபத்தில் மகாலட்சுமி.. இவ்வளவு நாளுக்குள் இப்படியா??
சென்னை: சமீபத்தில் தான் திருமணம் முடிந்த சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தன்னுடைய கணவரோடு ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோ பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருமணத்திற்கு முன்பு இதை செய்யக்கூடாது என்று சொன்னதை ரவீந்தர் செய்து வருவதால் கடும் கோபத்தில் மகாலட்சுமி இருக்கிறாராம்.
திருமணத்திற்கு முன்பு எல்லாத்துக்கும் ஓகே என்று சொன்ன ரவீந்தர் இப்படி நடந்து கொள்ளலாமா என்ன ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

மகாலட்சுமியின் திடீர் திருமணம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வாசுகி கேரக்டரில் நடித்து வரும் மகாலட்சுமி பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அவர் தற்போது திடீரென்று இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே அவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கும் நிலையில் இவருடைய இரண்டாவது திருமணம் பலரையும் வியப்புக்குள் ஆழ்த்தி இருந்தது.

பொருத்தம் இல்லாத திருமணம்
காரணம் தயாரிப்பாளர் ரவீந்தரை இவர் திருமணம் செய்திருந்தது தான். 90ஸ் கிட்ஸ்களில் பேவரைட் தொகுப்பாளராக இருந்த மகாலட்சுமி இவருக்கு கொஞ்சம் கூட அழகில் பொருத்தம் இல்லாத ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் தங்களுடைய கவலைகளை கமாண்டுகளில் கொட்டி வந்தனர்.

கண்டிஷன் மறந்து போச்சாம்
மகாலட்சுமி திருமணத்திற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்வது எனக்கு எந்த தொந்தரவு தரும் விதத்தில் இருக்க கூடாது. பிக் பாஸ் நிகழ்ச்சி ரிவ்யூ கொடுக்கிறேன் என்கிற பெயரில் மணி கணக்கில் வீடியோ முன்பு இருக்கக் கூடாது என்று பிக் பாஸ் குறித்து பல கண்டிஷன் மகாலட்சுமி கூறியிருந்தாராம். ஆனால் அதற்கு எல்லாம் சரி என்று கூறிய ரவீந்தர் தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கியதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்வதற்கு தொடங்கி இருக்கிறார். இதனால்தான் மகாலட்சுமிக்கு ரவீந்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறதாம்.

என்ன சத்தம் அங்கே
ரவீந்தர் தனியார் சேனலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வருகிறார். அதற்காக அவர் அறிமுகம் செய்வதற்காக சத்தமாக பேசியபோது, கடுப்பான மகாலட்சுமி என்ன சொன்னேன்? நான் இப்படி செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கேன் அல்லவா? என்று மிரட்டுகிறார். உடனே வாயில் கையை வைத்து அடக்கி வாசித்தபடியே ரவீந்தர் பேசி இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். என்னதான் ஊருக்கு உபதேசமும் அடுத்தவர்களை வக்கனையை கலாய்த்து வந்தாலும் வீட்டிற்குள் இருப்பவர்களிடம் அடங்கி தான் போக வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோவை தங்களுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் இவர்கள் இருவரும் பகிர்ந்து இருக்கின்றனர்.
-
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
வேடன் விவகாரம்... அமைச்சர் சந்திப்பால் மீண்டும் வெடித்த சர்ச்சை! சின்மயி கேள்விக்கு ரசிகர்கள் சொல்வது என்ன? -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
சிறகடிக்க ஆசை: பட்டும் திருந்தாத விஜயா.. அசிங்கப்படுத்தும் மனோஜ்! முத்துக்கு வெற்றி மேல் வெற்றி.. செம சம்பவம் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications