அனைவரையும் சிரிக்க வைத்த மனோரமாவின் ஆரம்பகாலத்தில் இவ்வளவு சோகங்களா? வாழ்வை மாற்றியவர் இவர்தானாம்
சென்னை: வாழ்வில் எத்தனையோ சாதனைகளை புரிந்தவர்களின் ஆரம்ப காலம் வேதனைகள் நிறைந்ததாக தான் இருந்துள்ளது. அதில் மனோரமாவும் ஒருவராக இருந்துள்ளார்.
யாரும் படக்கூடாத வேதனைகளை எல்லாம் மனோரமா ஆரம்ப காலகட்டத்திலேயே பட்டு அதிலிருந்து தான் வளர்ந்து உள்ளாராம்.

திரைத்துறையின் ஆச்சி
திரைத்துறையில் மனோரமாவாக அறிமுகமாகி ஆச்சி மனோரமாவாக அனைவருக்கும் பரிச்சயமான மனோரமாவின் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் அவர் பட்ட வேதனைகள் கேட்கும் பலருக்கும் கண்ணீரை வர வைக்கும் வகையில்தான் இருந்துள்ளது. 1937இல் தொடங்கி 2015 வரைக்கும் தென்னிந்திய திரைப்பட நடிகையாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி 1500 திரைப்படங்களுக்கும் மேல் மனோரமா நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகினராலும், தமிழ் திரைப்பட ரசிகர்களாலும் ஆச்சி என அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். தற்போது அவர் மறைந்து விட்டாலும் அவரை பலரும் மனோரமா ஆச்சி என்று தான் அழைத்து வருகிறார்கள்.

வேதனையான ஆரம்பகாலம்
மனோரமாவின் உண்மையான பெயர் கோபிசாந்தா தான். அவர் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ராஜ மன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் தான் பிறந்துள்ளார். அவருடைய தந்தை ஒரு சாலை ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் அவருடைய தந்தை அவருடைய அம்மா இருக்கும்போது இன்னொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளாராம். அதனால் அவருடைய அம்மா மனோரமாவின் அப்பாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து மனோரமாவை தனியாக அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டாராம்.

நின்றுபோன பள்ளிப்படிப்பு
தன் தாய் ஒருவரின் துணையோடு வெளி உலகத்தை மனோரமா பார்த்த விதம் மிகவும் பயங்கரமாக தான் இருந்துள்ளது. அவர் என்னதான் வசதியான குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் அதற்குப் பிறகு வறுமையில் தான் வாழ்ந்து இருக்கிறார்.
மனோரமா அப்போதே ஆறாம் வகுப்பு வரை படித்திருக்கிறாராம். அப்பா கூட இல்லாததால் அம்மா மட்டுமே இருந்த நிலையில் வீட்டில் இருந்த வறுமையின் காரணமாக மனோரமா அங்குள்ள செட்டியார் வீடுகளில் வீட்டு வேலைகள் தான் செய்து வந்துள்ளார். அவருடைய அம்மா பலகார வியாபாரம் செய்து வந்துள்ளாராம். மனோரமாவும் வீட்டு வேலை செய்துவிட்டு வந்து அவங்க அம்மாவிற்கு உதவியாக இருந்து வந்திருக்கிறார்.

நாடகத்தில் அறிமுகமானது இப்படிதானாம்
மனோரமாவின் 12வது வயதில் தான் அவர் நடிப்பு தொழிலில் இறங்கி இருக்கிறார். குழந்தையாக இருக்கும்போது அவரை பள்ளத்தூர் பாப்பா என்று அனைவரும் செல்லமாக அழைப்பார்களாம். நாடக இயக்குனர் திருவெங்கடம், ஆர்மோனிய கலைஞர் தியாகராஜன் ஆகியோர் தான் அவருக்கு மனோரமா என பெயரை மாற்றினார்களாம். ஆரம்பத்தில் வைரம் நாடக சபை நாடகங்களில் சின்ன வேடங்களில் நடித்து வந்திருக்கிறார். அப்போது தான் புதுக்கோட்டையில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மனோரமா பிஏ குமார் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டாராம். மனோரமாவின் திறமையை அறிந்து கொண்ட ராஜேந்திரன் தனது எஸ் எஸ் ஆர் நாடக மன்றத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நாடக மன்றத்தில் மணி மகுடமாக விளங்கிய தென்பாண்டி வீரன், புதுவெள்ளம் போன்ற நூற்றுக்கணக்கான நாடகங்களில் மனோரமா நடித்திருக்கிறாராம்.

கை கொடுத்த கவிஞர்
நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை சின்ன வயதில் இருந்தே இருந்ததாம். இவருடைய ஆசைக்கு தொடக்கப் புள்ளி வைக்கும் விதமாக தான் இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இவர் நடித்த ஆரம்ப திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் கவிஞர் கண்ணதாசன் இயக்கிய சொந்த திரைப்படமான மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதலில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு சம்மதிக்காத மனோரமாவை கவிஞர் கண்ணதாசன் தான் புத்திமதி கூறி எடுத்துக் கூறியிருக்கிறார்.

முதல் திரைப்படம்
மாலையிட்ட மங்கை திரைப்படங்களுக்கு முன்பு மனோரமா இரண்டு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அது வெளியாகாத நிலையில் முதல் முறையாக இவர் மூன்றாவதாக நடித்த திரைப்படம் வெளியாகிவிட்டது. அதனால் மனோரமா நடித்த முதல் திரைப்படம் மாலையிட்ட மங்கை திரைப்படம் அமைந்துவிட்டது. இந்த திரைப்படம்தான் மனோரமா வாழ்க்கையில் தொடர் புள்ளிகளை வைத்து வாழ்க்கையை தொடங்க வைத்தது என்று மனோரமா பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றி தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி வாழ்க்கையின் உயரத்திற்கு புத்திமதிகளையும் கூறியது கவிஞர் கண்ணதாசன் தான் என்றும் அந்த இன்டர்வியூவில் மனோரம்மா தெரிவித்திருந்தார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications