மனோரமாவின் கடைசி வரை நிறைவேறாத ஆசை.. எவ்வளவோ உழைத்தும் கிடைக்கவில்லையே..!!
சென்னை: திரைத்துறையில் பல ஆண்டுகள் வாழ்ந்துவந்த மனோரமா ஏங்கிய விஷயம் அவருக்கு கடைசிவரை கிடைக்காமலே போய்விட்டது.
எத்தனையோ சாதனைகளை புரிந்திருந்தாலும் மனோரமாவின் மனதிற்குப் பிடித்த அந்த ஒரு ஆசை மட்டும் நிறைவேறா விட்டாலும் அவருடைய வாழ்க்கையில் அவர் ஜெயித்தது ஏராளம் தான்.

மனோரமாவின் ஆரம்பகாலம்
திரையுலகத்தில் ஆச்சி மனோரமாவின் இறப்பு பலருக்கும் ஈடுகட்ட முடியாத ஒன்றாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவோ போராட்டங்களுக்கு மத்தியில் திரைத்துறையில் யாரும் சாதிக்க முடியாத உயரத்தை குறுகிய காலத்தில் மனோரமா சாதித்திருப்பது பெரியதுதான். எந்த வாய்ப்புகளும் இல்லாத சூழ்நிலையில் அடித்தட்டு நிலையில் இருந்து அனைவரும் அண்ணாந்து பார்க்கும் உயரம் வரை வளர்ந்து இருந்த மனோரமாவின் வளர்ச்சி பலருக்கும் வியப்பை கொடுத்திருந்தாலும் அவருடைய உண்மையான ரசிகர்களுக்கு அவருடைய உழைப்பு மற்றும் ஈடுபாடு எப்போதுமே வியப்பை தான் கொடுத்து கொண்டிருந்ததாம்.

கண்ணதாசன் கொடுத்த வாய்ப்பு
திரைத்துறையில் நடிகர்கள் மட்டுமே சாதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தன்னாலும் தனது திறமையை உலகத்திற்கு காட்ட முடியும் என்று மனோரமா அனைவருக்கும் நிரூபித்து உள்ளார். இவர் ஆரம்பத்தில் திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பு நாடகத்துறையில் தான் நடித்து வந்துள்ளார். பல்வேறு நாடகங்களில் இவர் நடித்து வந்ததன் காரணமாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இவர் கதாநாயகியாக மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று ஏக்கத்தோடும் ஆசையோடும் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஆனால் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் இவருக்கு கண்ணதாசன் கொடுத்த வாய்ப்பு பெரிய அளவில் வெற்றி கிடைத்துள்ளது.

கண்ணதாசனைப் பற்றி மனோரமா கூறியது
மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தின் மூலமாக கவிஞர் கண்ணதாசன் இவருக்கு நகைச்சுவை கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்து இருந்தார். அதற்குப் பிறகு மனோரமாவிற்கு 1963ல் கொஞ்சும் குமரி எனும் திரைப்படத்தில் முதல்முறையாக கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து 1960க்கு பிறகு நகைச்சுவை கேரக்டர்களில் அதிகமாக கவனத்தை செலுத்த தொடங்கியிருக்கிறார். அதற்கு காரணம் கண்ணதாசன் தான் என்று கூறியிருக்கிறார். மாலையிட்ட மங்கை படத்தில் என்னை நடிக்க வைத்து என் வாழ்க்கையை மாற்றியவர் அவர்தான். ஒரு நகைச்சுவையான கேரக்டராக என்னை நம்பினார், என்னை மிகவும் வற்புறுத்தி தான் அந்த திரைப்படத்தில் நடிக்க சொன்னார். அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னேன். இது எனக்கு மிகவும் சந்தேகம் இருந்தது ஆனால் அவர் என்னிடம் நீங்கள் ஒரு கதாநாயகியை மட்டுமே படங்களில் நடிக்க போகிறீர்கள் என்றால் அங்கு உளளவர்கள் உங்களை தொழில் துறையில் இருந்து இரண்டு மூன்று வருடங்களில் வெளியேற்றி விடுவார்கள் அதனால்தான் அத்தகைய கேரக்டர் உங்களுக்கு சிறப்பாக அமையாது. ஆனால் உங்கள் திறமைக்கு காமெடியில் நீங்கள் களமிறங்கினால் உயர்ந்த சிகரங்களை எட்டுவதற்கான திறமை உங்களிடம் உள்ளது என்று மனோரமாவிற்கு கண்ணதாசன் நம்பிக்கை ஊட்டி இருக்கிறார்.

ஏங்கிய ஆசை
கண்ணதாசன் கொடுத்த நம்பிக்கையின் காரணமாகவே 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மனோரமாவால் தொடர்ந்து நடிக்க முடிந்ததாகவும் கதாநாயகியாக தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தன்னுடைய நிஜமான கேரக்டரால் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் ஏங்கிய அந்த கதாநாயகி கேரக்டர் மட்டும் மனோரமாவிற்கு கடைசி வரை கிடைக்கவில்லை. இதை நினைத்து பல முறை அவர் வருந்தி இருந்தாலும் தன்னுடைய திறமைக்கு ரசிகர்கள் கொடுக்கும் மரியாதையும், பாசத்தையும் பார்த்து இதுவே போதும் என்று நினைத்து விட்டார் போல, சினிமா துறையில் யாரும் சாதிக்காத சாதனைகள் பல புரிந்து இருந்தாலும் நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயலலிதா அவருடைய நெருங்கிய தோழியாக இருந்துள்ளார்.

நடிகையர் திலகம்
மனோரமாவின் இறுதி சடங்கிற்கு வந்த பல பிரபலங்கள் அவரை பற்றிய உருக்கமான தகவல்களை கூறிக் கொண்டிருக்கும் போது உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் ஜெயலலிதா மனோரமாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அவரைப் பற்றிய உருக்கமான தகவல்களை கூறியிருந்தார். அதில் சிவாஜி கணேசன் நடிகர் திலகம் என்றால் மனோரமா தான் நடிகையர் திலகம். மனோரமாவை போன்ற சாதனை புரிந்தவர்கள் யாரும் இல்லை, எதிர்காலத்திலும் யாரும் இருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மனோரமா எனக்கு ஒரு மூத்த சகோதரி அவர் என்னை அம்மு என்று அழைக்கும் போது நான் அவரை மனோரமா என்று அழைத்தேன் என்று கூறியிருக்கிறார். என்னதான் இருந்தாலும் கடைசி வரை மனோரமா ஆசைப்பட்ட அந்த கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மட்டும் அவருக்கு பிரகாசமாக அமையவில்லை. ஆனாலும் அவர் மறைந்தாலும் ரசிகர்களை இப்ப வரைக்கும் பீல் பண்ண வைத்து வருகிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications