Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பாரதி கண்ணமாவில் நடந்திடுச்சே.. அங்க சுத்தி இங்க சுத்தி இப்படியா..??

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு திடீர் டிவிஸ்ட் கொடுத்து தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

பல வருடங்களாக டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் தெரிந்துவிடும் உண்மையை மூடி மறைத்து சீரியலை ஒட்டிக் கொண்டிருந்தவர்கள் தற்போது புது கதைக்களத்தை தொடங்கி விட்டார்கள்.

வெண்பா தற்போது கர்ப்பமாக இருப்பதால் இனி இப்படித்தான் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே கடைசியில் கதை வந்துவிட்டது.

 நெட்டிசன்களால் வளர்ச்சி

நெட்டிசன்களால் வளர்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்ப காலகட்டத்தில் அந்த அளவிற்கு பிரபலமாகாமல் இருந்த நிலையில் நெட்டிசன்களின் ட்ரோல்கள் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பரவி தற்போது டிஆர்பியில் முன்னணியில் வந்து கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சீரியலின் முன்னேற்றம் பலருக்கும் மேலும் மேலும் கலாய்க்க தூண்டும் விதமாக இருந்து வருகிறது. நெட்டிசன்கள் நாளுக்கு நாள் இந்த சீரியலை கலாய்த்து கொண்டே இருக்கின்றனர். அதனாலே என்னவோ இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகிறது.

பாரதிகண்ணம்மாவின் கதை

பாரதிகண்ணம்மாவின் கதை

காதலித்து தனது அம்மாவின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட டாக்டர் பாரதி அவரை ஒருதலையாக காதலித்த வெண்பாவின் சூழ்ச்சியால் மனைவியை சந்தேகப்பட்டு தன் குழந்தைக்கு தானே அப்பா இல்லை என்று கூறிவிட்டார். இதனால் கோபத்தில் பாரதியின் மனைவியான கண்ணம்மா பேக்கை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பி தற்போது பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இந்த சீரியலில் இன்னும் உண்மை தெரியாத வகையாகவே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

சொன்ன மாதிரியே நடந்திடுச்சு

சொன்ன மாதிரியே நடந்திடுச்சு

பாரதி கண்ணம்மாவின் கதை ஒரு டி என் ஏ டெஸ்ட் எடுத்தால் முடிந்துவிடும் என்பது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கதை இயக்குனருக்கும் தெரியும். அதனால் அந்த டெஸ்டில் அடிக்கடி டுவிஸ்ட் வைத்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து கொண்டிருக்கிறார். தற்போது பாரதியை ஒருதலையாக காதலித்த வெண்பாவிற்கு அவருடைய அம்மா திடீர் கல்யாணம் ஏற்பாடு செய்திருக்கிறார். போதையில் வெண்பா நிச்சயத்த ரோகித்துடன் முதலிரவு முடிந்து விட்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த எபிசோடுகள் வந்த உடனே ரசிகர்கள் பலரும் இனி இதற்கு பாரதி தான் தீர்வு என்று வெண்பா பாரதியிடம் அழுது சீன் போட்டு பாரதியை இந்த குழந்தைக்கு அப்பா என்று சொல்லும்படி நடித்து விடுவார் என்று கூறியிருந்தனர். தற்போது அது போலவே நடந்திருக்கிறது.

இனி இப்படித்தான் இருக்குமோ

இனி இப்படித்தான் இருக்குமோ

தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணம் யார் என்று தெரியாது என்றும் அதற்கு பாரதி தான் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி பாரதியிடம் கதறி அழுது வருகிறார். இதற்கு பாரதி என்ன சொல்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருப்பதை பார்த்ததும் நெட்டிசன்கள் இதைத்தான் நாங்கள் ஏற்கனவே போன வாரமே சொல்லிவிட்டோம். அதை இப்போது கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கூறி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் இனி வெண்பாவுக்காக பாரதி திருமணத்திற்கு சம்பந்தம் என்று கூறி மணமேடை வரைக்கும் சென்று விடுவார். கடைசியில் கண்ணம்மா வந்து திருமணத்தை நிறுத்துவார் இதுதான் நடக்கும் என்று அடித்துக் கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+