இது தெரியாம ரீசார்ஜ் செய்து காசை வீணடித்து விட்டோமே...பிரபல சீரியலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் வானத்தைப்போல சீரியலை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சீரியலின் டிஆர்பிகாக செய்த செயல் இந்த அளவிற்கு நெட்டிசன்களால் கலாய்க்கப்படும் என்று சீரியல் அணியினர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

சீரியலை ரசிக்கும் ரசிகர்கள்
சீரியல்கள் என்றாலே வீட்டில் இருக்கும் பெண்கள் பலர் அதற்கு அடிமைகளாக மாறிவிடுகிறார்கள். டிவி சேனல்களில் அதிகமாக பொழுதை போக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஒரு சேனல் என்று பார்க்காமல் பல சேனல்களில் சீரியல்களை மாற்றிப் பார்த்தாலும் சலிக்காமல் தினமும் அதற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து இருப்பது சன் டிவி சீரியல்கள் தான். சன்டிவி என்றாலே சீரியல்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்த வகையில் தற்போது ரசிகர்கள் பலரையும் கவர்ந்த சீரியலாக இருக்கும் வானத்தைப்போல சீரியல் தற்போது நெட்டிசன்களால் அதிகமாக
கலாய்க்கபட்டு வருகிறது.

அண்ணன் தங்கை பாசம்
என்னதான் சீரியல்கள் என்றாலும் அதில் ரசிகர்களின் சுவாரசியத்தை கூட்டுவதற்காக சீரியல் குழுவினர்கள் செய்யும் செயல்கள் பல நேரங்களில் பலரையும் திகைப்படைய செய்ய வைத்துவிடுகிறது. ஏற்கனவே டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் வானத்தைப்போல சீரியலிலும் இந்த நிலைமை தற்போது நடந்து வருகிறது. அண்ணன் தங்கச்சி கதையை மையமாகக் கொண்டு பல திரைப்படங்களும் சீரியல்களும் வந்திருந்தாலும் தற்போதைய நிலையில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த சீரியலாக பாசமலர் திரைப்படத்தில் கதையை மிஞ்சும் அளவிற்கு அண்ணன்-தங்கை பாசத்தை பொழிந்து கொண்டிருக்கும் வானத்தைப்போல சீரியல்தான்.

வானத்தைப்போல சீரியலின் கதை
ஏற்கனவே தற்போதுதான் வானத்தைப்போல சீரியலின் தங்கை துளசி கேரக்டரில் நடித்து வந்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அதற்கு காரணம் ப்ரொடக்ஷன் தரப்பில் பிரச்சனை, தேதி, நேரம் போன்ற பிரச்சினைகளால் சீரியல்களில் இருந்து இவர் விலகி விட்டதாக கூறி இருந்தார். அதே நேரத்தில் அவருக்கு பதிலாக கன்னட சீரியல் நடிகை மான்யா என்பவர் தற்போது நடித்து வருகிறார். ஸ்வேதாவை தொடர்ந்து இந்தத் தொடரில் சின்னராசு ரோலில் நடித்து வந்த தமன் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் நடித்துவருகிறார். சீரியலின் கதைப்படி துளசியின் மாமனாரும் அவருடைய தங்கையும் சேர்ந்து துளசியின் அண்ணன் சின்னராசு சொத்தை அபகரிக்க திட்டம் தீட்டுகிறார்கள். துளசி இவர்களுடைய திட்டத்தை தெரிந்து கொண்டு தன்னுடைய அண்ணன் உறவை முறித்துக் கொள்ள மாட்டேன் தொடர்வேன் என்று சொல்லுங்கள் சொத்தை வாங்கி தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இது தெரியாம போச்சே
பல புது திருப்பங்களுடன் வானத்தை போல சீரியல் சென்று கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதை பார்த்ததும் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து கலாய்க்க தொடங்கியிருக்கின்றனர். துளசி தன்னுடைய கையில் சின்னராசு என்று பெயர் பச்சை குத்தி இருப்பார், அதுபோல் சின்னராசு தன்னுடைய கையில் துளசி என்று பச்சை குத்தி இருப்பார். துளசி தன்னுடைய வீட்டில் இருந்து கையைப் பார்த்து அண்ணா என்று கூப்பிடுகிறார். உடனே சின்னராசு அவர் வீட்டில் இருந்து கொண்டு கையை பார்த்து சொல்லுமா தங்கச்சி என்கிறார். இவர்கள் இருவரும் இப்படி கையைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்ததும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை டுவிட்டரில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். அதில் பலர் இப்படியெல்லாம் டெக்னிக் இருப்பது நமக்கு தெரியாமல் போய்விட்டதே..இது தெரியாமல் நாம எவ்வளவு காசு ரீசார்ஜ் செய்து வேஸ்ட் செய்துவிட்டோம் என்று புலம்பி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications