முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு படை.. கைவிரித்தது மத்திய அரசு...
டெல்லி: முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையை நிறுத்துவது தொடர்பாக தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் எனக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துமாறு உத்தரவிட்டது.

அணையின் பாதுகாப்பு கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பராமரிப்பு பொறுப்பு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், அணையைப் பராமரிக்க செல்லும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள அதிகாரிகளும், கேரள வனத்துறையினரும் அனுமதிக்கவில்லை.
இதனால், அணையைப் பார்வையிடவும், பராமரிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது..
உள்நாட்டு சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பிரச்னை விஷயத்தில் அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுக்க முடியும். அந்த அதிகாரம் சம்மந்தப்பட்ட மாநில அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க முடியும். அதில் மத்திய அரசு தலையிட முடியாது.
எனவே, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை முல்லைப் பெரியாறு அணைக்கு வழங்குவது குறித்து மத்திய அரசால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.
அணை பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளது என்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் உதவி வேண்டும் என்று கேரள அரசு கேட்டால் மட்டுமே மத்திய தொழில் பாதுகாப்பு தருவது குறித்து பரிசீலனை செய்ய முடியும்.
தமிழக அரசு இந்த விஷயத்தில் கோரிக்கை வைக்க முடியாது. இந்த விஷயத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தேவையில்லை.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று கேரள அரசு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த பதில் மனு தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications