Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 மணி நேரம் பாதுகாப்பு இல்லாமல் நடந்த பெண்கள்.. சபரிமலை கோவிலுக்குள் சென்றது எப்படி?.. பரபர தகவல்

சபரிமலை கோவிலுக்குள் சென்ற இரண்டு பெண்களும் எப்படி பிரச்சனை இல்லாமல் தரிசனம் செய்தனர் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பாதுகாப்பு இல்லாமல் சபரிமலை உள்ளே பெண்கள் சென்றது எப்படி?- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் சென்ற இரண்டு பெண்களும் எப்படி பிரச்சனை இல்லாமல் தரிசனம் செய்தனர், எப்படி கோவிலுக்குள் சென்றனர் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இன்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த இரண்டு பெண்களும் அங்கு சாமி தரிசனம் செய்து உள்ளனர். இவர்கள் இருவரும் 50 வயதிற்கும் குறைவான பெண்கள் ஆவர்.

    மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா என்ற 46 வயது பெண்ணும், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து என்ற 40 வயது பெண்ணும் இன்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் சென்றுள்ளனர். இவர்கள் காலை 3.45 மணிக்கு கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

    யாரிடமும் சொல்லவில்லை

    யாரிடமும் சொல்லவில்லை

    இவர்கள் இருவரும் சபரிமலைக்கு செல்வதை யாரிடமும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கேரளா போலீசிடம் கூட அவர்கள் சொல்லவில்லை. இதனால் அவர்களுக்கு கோவிலுக்கு செல்ல எளிதான சூழ்நிலை நிலவி வருகிறது. முக்கியமாக சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் இதுகுறித்து தகவல் தெரிவிக்கவில்லை.

    எப்போது சென்றனர்

    எப்போது சென்றனர்

    இவர்கள் சரியாக 12 மணிக்கு பம்பா சென்று உள்ளனர். அங்கே நிறைய ஆண் பக்தர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இவர்களை தடுக்கவில்லை. அவர்களுடன் சேர்ந்துதான் இரண்டு பெண்களும் சபரிமலை நோக்கி நடந்து இருக்கிறார்கள். நடு இரவு என்பதால் எந்த போராட்டக்காரரும் அங்கு இல்லை.

     அதிகாலைக்குள் நடந்தனர்

    அதிகாலைக்குள் நடந்தனர்

    12 மணிக்கு பம்பாவில் இருந்து சபரிமலை கோவில் நோக்கி சென்று இருக்கிறார்கள் அந்த பெண்கள். பக்தர்களுடன் எந்த பாதுகாப்பும் இல்லாமல் அவர்கள் கோவிலை நோக்கி சென்றுள்ளனர். 3.30 மணி நேரம் அவர்கள் பொறுமையாக நடந்து சென்றார்கள். ஆனால் அவர்கள் எந்த விதமான பிரச்சனைக்கும், சங்கடத்திற்கு உள்ளாகவில்லை.

    எப்போது நுழைந்தனர்

    எப்போது நுழைந்தனர்

    இந்த நிலையில் அதிகாலை 3.45 மணிக்கு அவர்கள் கோவிலுக்குள் நுழைந்தனர். உள்ளே நுழைந்தவுடன் பக்தர்களுடன் அவர்கள் தரிசனம் செய்ய சென்றனர். ஆனால் அவர்கள் நேர் வழியில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கோவிலின் பின் பக்கம் வழியாக அவர்கள் உள்ளே சென்றனர்.

    தரிசனம் செய்தனர்

    தரிசனம் செய்தனர்

    இதையடுத்து கோவிலில் இருக்கும் 18 படிகளில் ஏறாமல் அவர்கள் பின்பக்கம் வழியாக சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். பின் பக்தர்களுடன் அவர்கள் வெளியேறினார்கள். இந்த மொத்த நிகழ்வும் மிகவும் அமைதியான முறையில் நடந்து இருக்கிறது. அதன்பின் அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் இருந்து வெளியே சென்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+