தேசிய அளவில் இதுதான் தலைப்பு செய்தி.. பரபரப்பை ஏற்படுத்திய கோபால் கைது!
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video

சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

யார் அளித்தது
முக்கியமாக நேரடியாக ஆளுநர் பெயரில் இந்த புகார் அளிக்கப்படவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்துதான் புகார் சென்றுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து, ஆளுநரின் செயலாளர் ஒருவர் மூலம் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.

முதல்முறை இப்படி
முதல்முறை தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. ஆளுநர் மாளிகை பத்திரிக்கையாளர் ஒருவரை கைது செய்ய சொல்லி புகார் அளிப்பதும், அவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படுவதும் இதுவே முதல்முறையாகும்.

தேசிய அளவில் கவனம்
இந்த நிலையில் நக்கீரன் கோபால் கைது தேசிய அளவில் வைரல் ஆகியுள்ளது. இவர் இந்தியா முழுக்க எல்லோருக்கும் தெரிந்த பத்திரிக்கையாளர் என்பதாலும், முக்கியமான இதழ் ஒன்றின் ஆசிரியர் என்பதாலும் இந்த செய்தி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து இருக்கிறது. ஆங்கில ஊடகங்கள் இதை அதிக கவனத்துடன் எழுதி வருகிறது.

மீண்டும் பரபரப்பு
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் இப்போதுதான் கொஞ்சம் அமைதியானது. தற்போது இந்த கைது காரணமாக இந்தியா முழுக்க அந்த செய்தி குறித்து தகவல் சென்று வருகிறது. பல ஆங்கில, இந்தி ஊடகங்கள் நிர்மலா தேவி விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications