கலங்கிய ஷாருக்கான்.. ஜெயிலில் மகனுக்கு மணியார்டர் அனுப்பினார்.. அதுவும் ரூ.4500 மட்டுமே..!
மகனுடன் வீடியோ கால் பேசினார் ஷாருக்கான்
மும்பை: கோடிக்கணக்கில் பணம் இருந்தும், சிறையில் உள்ள மகனுக்கு 4500 ரூபாய் மட்டுமே ஷாருக்கான் மணியார்டர் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்... 2-ம் கட்டமாக இந்த வழக்கில் மேலும் சிலரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுவரை இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன்கான் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கோர்ட்
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் ஏற்கனவே ஒத்திவைத்திருந்த நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.. 3வது முறையும் இவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

விசாரணை
என்சிபி தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர், கப்பலில் சோதனை நடத்திய போது ஆர்யன் கானிடம் இருந்து எந்தபோதை பொருட்களும் கிடைக்கவில்லை என்றாலும், அவர் கடந்த சில வருடங்களாகவே போதை பொருளை சாப்பிட்டு வந்துள்ளார், அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தனர், ஆனாலும் ஜாமீன் கிடைக்கவில்லை என்றார். இதனிடையே, மகனை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தவிப்புடன் ஷாருக்கான் இருக்கிறார்.. அதற்கான எல்லா பக்கங்களிலும் முயற்சி எடுத்து கொண்டு வருகிறார்..

கைதிகள்
விசாரணை கைதிகள் காவலரின் முன்னிலையில் மாதந்தோறும் 2 அல்லது 3 முறை தங்கள் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞரை தொடர்புகொள்ளும் வசதி இந்த சிறையில் கடந்த ஆண்டுமுதல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன்கான், கைதாகி 12 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக தன்னுடைய அப்பா, அம்மாவுடன் வீடியோ காலில் பேசினார்.

கண்காணிப்பு
குடும்பத்துடன் வாரம் 2 நாட்கள் வீடியோ காலில் பேச கோர்ட் அனுமதி தந்துள்ள நிலையில், ஷாருக்கானும் அவரது மனைவி கௌரியும் சிறை அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் 10 நிமிடம் வீடியோ கால் பேசினார்கள். வீடியோ காலில் அப்பா, அம்மாவுடன் ஆர்யன்கான் கண்கலங்கி பேசியிருக்கிறார்.. அதேபோல, மகனை பார்த்து ஷாருக்கானும் கண்கலங்கியதாக கூறப்படுகிறது.

கேன்டீன்
இதனிடையே, மகனின் செலவுக்காக ரூபாய் 4500 ஷாருக்கான் மணி ஆர்டர் செய்துள்ளாராம்.. இந்த பணம், சிறையில் இருக்கும் கேன்டீனில் விற்கும் பொருட்களை, அவர் வாங்கி சாப்பிடுவதற்காகவே அனுப்பி வைத்துள்ளாராம்.. கோடி கணக்கில் பணம் இருந்தாலும், கைதியாக இருக்கும் தன்னுடைய மகனுக்கு அதிகப்பட்சமாக ரூ.4,500 மட்டுமே மணியார்டர் அனுப்ப முடியும் என்பதால், அந்த தொகையை ஷாருக்கான் அனுப்பியுள்ளதாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன..

மணியார்டர்
இத்தொகைக்கு மேல் அனுப்ப அனுமதி கிடையாது. இத்தகவலை சிறை கண்காணிப்பாளர் நிதின் வேச்சல் தெரிவித்துள்ளார்.. ஆனாலும் ஜெயில் சாப்பாடுகளை ஆர்யன் கான் சாப்பிடுவதில்லையாம்.. ஷாருக்கானின் மனைவி கவுரி கான், வீட்டில் இருந்து காலை டிபனும் அவருக்கு தேவையான பொருட்களையும் சிறைக்கு சில நாட்களுக்கு முன் கொண்டு சென்றார். ஆனால், ஆர்தர் ரோடு சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications