Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்னிபாத்.. பஞ்சாப் முதல்வர் கான்வாயை மறித்த இளைஞர்கள்! தலையை வெளியே நீட்டி.. அடுத்து நடந்த சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: அக்னிபாத் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரின் அழைப்புக்கு காரை நிறுத்திய பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானின் செயல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 'அக்னிபாத்' என்ற திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜூன் 14ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார். இத்திட்டத்தில் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க வாய்ப்பளிக்கப்படும். 4 ஆண்டு பணியை முடித்து வெளியில் செல்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. இந்த திட்டம் மூலம் இந்தியாவின் முப்படைகளையும் இளமையாக இளைஞர்கள் நிறைந்ததாக வைத்து கொள்ளலாம் என ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Agnipath Protest: Youth stopped Punjab Chief Minister Bhagwant Mann video is trending in Social Media

ஆனால் அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டம் நீண்டநாள் ராணுவ சேவையாற்ற விரும்பும் இந்திய இளைஞர்களின் விருப்பத்துக்கு மாறாக உள்ளது. மேலும் ஒப்பந்த பணியாக ராணுவ சேவை மாற்றப்படுவதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ரயில்கள் எரிக்கப்பட்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இளைஞர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த, பாஜக அரசு எடுத்த முயற்சிகள் எதுவும் இதுவரை பலனளிக்கவில்லை. அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு, உள்துறை அமைச்சகங்களில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இருந்தும் இளைஞர்களின் போராட்டங்கள் குறைந்தபாடில்லை. இதனைத்தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தொடர்ந்து 2ம் நாளாக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மக்களை சந்திப்பதற்காக பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், காரின் சன்ரூஃப் வழியாக நின்றுகொண்டு வந்துள்ளார். அப்போது சாலையில் கருப்பு உடையணிந்து நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர், பகவந்த் மானுக்கு கைகளை காட்டி சிக்னல் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக காரை நிறுத்திய முதலமைச்சர் பகவந்த் மான், இளைஞரின் கைகளை பிடித்து என்ன கோரிக்கை என்று கேட்டார். அதற்கு, மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் குறித்து இளைஞர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அந்த இளைஞரிடம் பதிலளித்த பகவந்த் மான், அக்னிபாத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன் அனைத்து தலைவர்களுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். இதுதொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றால், நிச்சயம் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இளைஞர் ஒருவரின் குரலுக்கு முதலமைச்சர் பகவந்த் மான் காரை நிறுத்திய பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+