சீனுக்கு வந்த எஸ்வி சேகர்.. அண்ணாமலையையே சீண்டுகிறாரா? "கடனாளி" கருத்தை கலாய்த்து ட்விட்டர் பதிவு
தமிழ்நாடு அரசியலில் அதிகம் தலைகாட்டாமலேயே இருந்து வந்த எஸ்வி சேகர் இதற்கு முன் அண்ணாமலையை ஜெயக்குமார் விமர்சித்த ஒரு செய்தியையும் பகிர்ந்து
சென்னை: அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டு சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் இழந்து நானும் கடனாளியாகி இருக்கிறேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், அதனை கலாய்க்கும் வகையில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி சேகர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. பாஜக ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு இரு கட்சிகள் இடையேயான மோதல் முற்றியது.
அவரை தொடர்ந்து பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த திலீப் கண்ணன் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருடன் மேலும் பலரும் பாஜகவிலிருந்து விலகி அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்தனர்.

பாஜக நிர்வாகிகள் கூட்டம்
குறிப்பாக அண்ணாமலையை விமர்சித்து கருத்து தெரிவித்தவர்களையே கட்சியில் இணைத்தது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

தனியாக இருக்க வேண்டும்
அப்போது பேசிய அண்ணாமலை, "பாஜக தமிழ்நாட்டில் தனியாக இருந்தால் மட்டுமே அதை வளர்க்க முடியும். நான் பாஜகவை தனியாக வளர்த்து எடுக்க பாடுபட்டு வருகிறேன். நான் கட்சியின் மாநில தலைவர் என்றுதான் சொல்கிறேன். நான் ஒன்றும் பாஜகவின் மேனேஜர் இல்லை. எனக்கு உரிய சுதந்திரத்தை வழங்க வேண்டும்.

அதிமுக கூட்டணி வேண்டாம்
வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன். பாஜகவை தமிழ்நாட்டில் வெற்றிபெற வைப்பதற்கான திட்டங்களை நான் வைத்து உள்ளேன். எனது வழியில் செயல்பட முடியாதபோது பதவியில் இருந்தே ராஜினாமா செய்கிறேன்." என்று தெரிவித்தார்.

கடனாளியாகிவிட்டேன்
அண்ணாமலையின் இந்த பேச்சால் பாஜகவிற்கு உள்ளேயும் வெளியிலும் பல்வேறு சலசலப்புகள் கிளம்பி இருந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். நான் எனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளேன். பணம் இல்லாமல் அரசியல் செய்ய வேண்டும். போலீஸ் அதிகாரியாக சிறுக சிறுக பணம் சேர்த்து அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்து இப்போது கடனாளியாகிவிட்டேன்." என்று தெரிவித்து இருந்தார்.

எஸ்வி சேகர் ட்வீட்
இந்த நிலையில்தான் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் இருக்கும் படத்தை பகிர்ந்து அவர், "அரசியல் அரிச்சுவடி.1. நான் கடனில் இருக்கிறேன் என்றால் வெள்ளை கணக்கில் பணமில்லை என்று பொருள். கருப்பு கணக்கிலே வராது. நம்ம கண்ணிலும் படாது." என்று பதிவிட்டு இருக்கிறார்.

அண்ணாமலை மீது விமர்சனம்
சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் போன நடிகர் எஸ்வி சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தவறாக பேசியதற்காக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு அரசியலில் அதிகம் தலைகாட்டாமலேயே இருந்து வந்த எஸ்வி சேகர் இதற்கு முன் அண்ணாமலையை ஜெயக்குமார் விமர்சித்த ஒரு செய்தியையும் பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications