பழனி முருகன் கோவில் படிப்பாதை, உப சன்னதிகளில் இன்று கும்பாபிஷேகம்.. நாளை பிரதான சன்னதி குடமுழுக்கு!
பழனியில் படிப்பாதை, இடும்பன், கடம்பன் சன்னதிகளில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது.
திண்டுக்கல் : பழனி மலைக்கோவிலின் சுற்றுப்புற கோவில்கள் மற்றும் அடிவாரத்தில் உள்ள கோவில்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழனி முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பழனி மலை அடிவார சன்னதிகள், கிரி வீதியில் உள்ள மயில்கள், பாத விநாயகர் கோயில் உள்ளிட்ட உப கோவில்களில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது.
படிப்பாதையில் உள்ள சேத்ரபாலர், சண்டிகாதேவி, விநாயகர், இடும்பன், கடம்பன், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுத சுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட உப தெய்வ சன்னதி கோபுரங்களுக்கும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழனி குடமுழுக்கு
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 27ஆம் தேதி) நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியின் பிரதானமாக விளங்கும் மலைக்கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதையடுத்து பழனி கோவில் மூலவரான நவபாஷாண முருகனுக்கு மருந்து சாத்தும் பணி நடைபெற்றது. கடந்த 23ஆம் தேதி மாலை முதல்கால யாக பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக யாக வேள்வி நிகழ்ச்சியில், நேற்று வரை நான்கு கால யாக பூஜைகள் நிறைவடைந்தன.

இன்று குடமுழுக்கு
நாளை அதிகாலையுடன் 8 கால யாக பூஜைகள் நிறைவடைந்து, கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில் மலைக்கோவில் மூலவர், ராஜகோபுரம், தங்க விமானம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள திருக்கோவில்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பழனியில் இன்று பாதவிநாயகர், சேத்ரபாலர், கிரிவீதியில் உள்ள 5 மயில் சிலைகள், படிப்பாதை சன்னதிகள், விநாயகர் சன்னதிகள், இடும்பன், கடம்பன், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுத சுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் சன்னதிகளில் குடமுழுக்கு நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகம்
இதையடுத்து நாளை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்தம் அபிஷேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பின்னர் காலை 7.15 மணிக்கு பெருநிறை வேள்வி, தீபாராதனை, கட்டியம், கந்தபுராணம், பன்னிரு திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடக்கிறது. காலை 8.15 மணிக்கு மங்கல இசையுடன் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து தேவாரம் பன்னிசை, திருப்புகழ் பாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமியின் ராஜகோபுரம், தங்க விமானத்தில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

உள்ளூர் விடுமுறை
பழனி கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி நாளை (27ஆம் தேதி) திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக பழனி அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கத்தில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் பாதுகாப்பு கருதி அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications