பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அதிரடியை கிளப்ப போகும் புது என்ட்ரி யார் தெரியுமா??
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் லேட்டஸ்ட் ப்ரமோ ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதிய நபர் இந்த சீரியலில் அறிமுகமாக போகிறார் என்று பலருக்கும் தெரிந்தாலும், யார் அவர் என்று அனைவரும் கேட்டு வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த மீனா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் முதன்மையானதாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் குடும்ப கதையை மையமாகக் கொண்டது. அண்ணன் தம்பிகளின் அன்பு பாசத்தை இந்த சீரியல் விளக்கிக் கொண்டிருந்தாலும், இதில் நடக்கும் சண்டை சச்சரவுகளும் சுவாரசியமாக தான் இருந்து வருகிறது. இதில் பலருக்கும் பேவரைட் கேரக்டராக இருக்கும் மீனா அடிக்கடி செய்யும் செயல்களும், செல்ல கோபமும், பிடிவாதங்களும் தான் இந்த சீரியலின் சுவாரஸ்யத்துக்கு மேலும் மெருகூட்டி வருகிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

திடீரென மாறிய கதைக்களம்
இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு திடீர் மரண செய்தியை வைத்து அழுகாச்சி சீன்களை கொண்டுவந்து பலரையும் பீல் பண்ண வைத்துவிட்டனர். கண்ணன் ஐஸ்வர்யாவின் திடீர் திருமணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும், இந்த நேரத்தில் அடுத்த ஒரு மரணத்தை வைத்து சீரியலை ஒரு சில வாரங்களுக்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டனர். அதற்கு பிறகு சுவாரசியமாக எதுவும் இல்லையே என்று பலர் கேட்டுக்கொண்டிருந்தது சீரியல் டீமுக்கு தெரிந்து விட்டது போல.

அடுத்த திருப்பம்
தற்போது சீரியலில் கண்ணனை குடும்பத்தில் சேர்த்து இருந்தாலும் கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு உறவினர்கள் யாரும் மரியாதை கொடுக்காத நிலையில் தான் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கயல் பாப்பாவின் காதுகுத்து விழா சிறப்பாக நடத்த வேண்டும் என்று மீனாவின் தந்தை ஆசைப்பட்டு உள்ளார். அவரது ஆசைக்கு குடும்பமும் சம்மதித்து விழாவை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத பல நிகழ்வுகள் அதில் நடந்து வருகிறது.

தொடங்கியது தாய்மாமன் பிரச்சனை
மீனாவின் குழந்தை கயல் பாப்பாவிற்கு தாய்மாமன் முறை செய்வதற்காக தனத்தின் அண்ணன் செலவுகளை செய்து வந்திருப்பதை பார்த்ததும் மீனாவின் தந்தை நீ எதற்கு இதெல்லாம் செய்கிறாய் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு தனத்தின் அண்ணன் கயலும் என்னுடைய மருமகள் தான் என்று கூறியிருக்கிறார். அடுத்த நொடியே மீனாவின் அம்மா சடங்கு செய்வதற்காகவே மீனாவின் அப்பாவின் அண்ணன் மகன் வந்துள்ளான் என்று கூறியிருக்கின்றனர். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது வெடி வெடித்து அலப்பறை செய்து கொண்டு ஒரு கூட்டம் வருகிறது. அதை வரவேற்க குடும்பமே சென்றிருக்கிறது. அப்போது புதுமுகம் இந்த சீரியலில் ஒருவர் அறிமுகமாகிறார்.

புதிய அறிமுகம்
சீரியலில் அறிமுகமாகும் நபரின் முகத்தை சரியாக காட்டாததால் ரசிகர்கள் யார் அவர் என்று ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோ ஒன்றை மீனாவாக நடிக்கும் ஹேமா வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்ததும் ரசிகர்கள் இவர்தானா அவர் என்று கேட்டு வருகின்றனர். அவரைப் பற்றியும் அதிகமாக விசாரித்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications