Pandian Stores Promo: திமிராக பேசிய கதிர், செந்தில்.. பணத்தை கேட்டு செக் வைத்த பாண்டியன்! கோமதியால் வந்த வினை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial promo) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 மார்ச் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் காணாமல் போன கோமதியை தேடி மொத்த குடும்பமும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் மற்றும் செந்தில் இருவரும் பேசிய வார்த்தைகளை கேட்டு பாண்டியன் எதிர்பாராத ஒரு முடிவை எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கோமதி தன்னிடம் சொல்லாமல் கதிர் மற்றும் ராஜி கல்யாணத்தை நடத்தி வைத்ததற்காகவும், அந்த உண்மையை மறைத்ததற்காகவும் பாண்டியன் கோமதி மீது கோபத்தில் இருக்கிறார். எவ்வளவு சமாதானம் சொல்லியும் பாண்டியன் பேசாமல் இருப்பதால் மீனா கொடுத்த ஐடியாவை கேட்டு கோமதியும் இப்போது பாண்டியனிடம் சென்று பேசாமல் பிகு பண்ணிக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்றைய எபிசோடு
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் கோமதியும் மீனாவும் கோவிலுக்கு சென்றிருந்தனர். அப்போது போனை கோமதி கிச்சனிலே மறந்து வைத்து விட்டு போய்விட்டார். ஆனால் நான் கோவிலுக்கு போறேன் என்று தன்னுடைய அம்மா காந்திமதியிடம் சொல்லிவிட்டு தான் போயிருந்தார். ஆனால் காந்திமதி தன்னுடைய மகளையும் மருமகனையும் மீண்டும் பேச வைக்க வேண்டும் என்பதற்காக போனை ஒழித்து வைத்துவிட்டு கோமதி எங்க போனான்னே தெரியல என்று ஒரு நாடகத்தை போட்டு இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ
இதனால் மொத்த குடும்பமும் தேட தொடங்கி இருந்தனர். ஏற்கனவே மீனா கோவிலுக்கு போவதற்கு முன்பு செந்திலிடம் நான் உங்க அம்மா கூட கோவிலுக்கு போறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் செந்தில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததால் அவரும் இதை சரியாக கவனிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் காந்திமதி என் மகளை காணலையே என்று அழுது கொண்டிருக்க மொத்த குடும்பத்தினரும் தவித்து போய்க் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் பாண்டியன் வீட்டிற்கு வர அவரிடம் செந்திலும், கதிரும் அம்மாவை காணவில்லை உங்களுக்கு இப்போ நிம்மதி தானா? அம்மா உங்க கிட்ட பேசுறதுக்காக எத்தனை முறை முயற்சி செஞ்சாங்க நீங்க பேசாததால தான் அவங்க இப்ப வீட்டை விட்டு போயிட்டாங்க என்று கோபத்தில் திட்டுகின்றனர். அதோடு நான் கல்யாணம் பண்ணுனது உங்களுக்கு பிடிக்கல இவன் கல்யாணம் பண்ணுனதும் உங்களுக்கு பிடிக்கல ஆனால் நாங்க நிம்மதியாக நல்லா தானே இருக்கிறோம்.
மீண்டும் வந்த கோமதி
நீங்க கல்யாணம் பண்ணி வச்ச சரவணன் அண்ணன் வாழ்க்கை என்ன ஆச்சு என்று கேட்டதும் பாண்டியன் அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்து இருக்கிறார். அந்த நேரத்தில் கோமதி கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வர நடந்த விஷயத்தை எல்லாம் கோமதி சொல்கிறார்.
இதனால் கடுப்பான பாண்டியன் இப்போ என்ன ஆச்சு தெரியுதா? நான் உங்க வாழ்க்கைக்காக எதுவும் பண்ணலன்னு நீங்க சொல்றீங்களே நான் உங்க ரெண்டு பேருக்கும் 10 லட்சம் தந்தேனே... அந்த பணத்தை இன்னும் ரெண்டே மாசத்துக்குள்ள தரணும் என்று செக் வைக்க மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியாகி நின்று கொண்டிருக்கின்றனர். இப்படியாக ப்ரோமோ இருக்க, அடுத்த வாரம் இதை வைத்து இனி பஞ்சாயத்து வரப்போகிறது என்று தெரிகிறது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications