Pandian Stores 2 serial promo: கோமதி குடும்பத்திற்காக வந்த அண்ணன்கள்.. அதிர்ச்சியில் பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 டிசம்பர் 29ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜெயிலில் இருக்கும் பாண்டியன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கோமதியின் அண்ணன்கள் வந்திருக்கின்றனர். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத கதைக்களம் தான் போனவாரத்தில் வந்திருந்தது. இந்த சீரியலில் தங்கமயில் பற்றிய உண்மைகளை சரவணன் குடும்பத்தினரிடம் சொல்லி இருக்கிறார். இதனால் குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அப்போது தங்கமயிலை வீட்டை விட்டு சரவணன் துரத்தி இருக்கிறார்.

ஆனால் தங்கமயில் எப்படியாவது சரவணனுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று அழுது கொண்டிருக்கிறார். அப்போது சரவணன் அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ் தங்கமயிலுக்கு கிடைக்கிறது. இதனால் தங்கமயில் இனி அந்த வீட்டிற்கு என்னால் போகவே முடியாதா என்று அழுது கொண்டிருக்கிறார். அப்போது எப்படியாவது தங்கமயிலை மீண்டும் பாண்டியன் வீட்டில் வாழ வைக்க வேண்டும் என்பதற்காக தங்கமயிலின் அம்மா பாண்டியன் குடும்பத்தினர் மீது வரதட்சனை கொடுமை புகார் கொடுத்து இருக்கிறார்.
நான் 80 பவுன் நகை போட்டு கல்யாணம் பண்ணி கொடுத்திருந்தாலும் அந்த வீட்டில் தன்னுடைய மகளை வேலைக்காரி போல நடத்திக் கொண்டிருப்பதாகவும், இப்போது மீண்டும் பணம் வேண்டும் என்று அடித்து துரத்தி விட்டார்கள் என்று தங்கமயிலின் அம்மா பாக்கியம் கொடுத்த பொய் புகாரால் சரவணனின் மொத்த குடும்பத்தினரையும் போலீஸ் அரெஸ்ட் செய்து ஸ்டேஷனில் வைத்திருக்கின்றது.

இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பாண்டியன் குடும்பத்திற்காக கோமதி அண்ணன் இருவரும் வந்திருக்கின்றனர். கூடவே குமாரும் வந்திருக்கிறார். அப்போது ராஜி தன்னுடைய அப்பாவிடம் ஓடி சென்று அழுது கொண்டிருக்கிறார். அவருக்கு ராஜிவின் அப்பா ஆறுதல் சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து சின்ன அண்ணனிடம் கோமதி அழுது கொண்டிருக்கும் போது அவரும் கோமதியின் கைகளைப் பிடித்து ஆறுதல் சொல்கிறார். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் இந்த சின்ன பிரச்சனைக்காக இவங்க எல்லாரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கண்டிப்பா கூட்டிட்டு வரணுமா என்று கேட்க அதற்கு போலீஸ், அவங்க வீட்டு மருமகள் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க, அதை வாபஸ் வாங்குனா தான் இவங்க எல்லாரையும் வெளியே அனுப்ப முடியும் என்று போலீஸ் சொல்லி விடுகின்றனர்.

இதனால் இனி கோமதிக்காக அவருடைய அண்ணன்கள் தங்கமயில் குடும்பத்திடம் பேசி பிரச்சினையை முடிக்க போகிறார்களா? அல்லது இந்த பிரச்சனையில் பாண்டியனை மட்டும் சிக்க வைக்க போகிறார்களா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. கோமதியின் அண்ணன்கள் மாற்றத்தை ரசிகர்களால் மட்டுமல்லாமல் கோமதியாலும் நம்ப முடியவில்லை.
கோமதியின் அண்ணன்கள் சக்திவேல் முத்துவேல் செய்த செயலை பார்த்து பாண்டியனும் அதிர்ச்சியில் தான் இருக்கிறார். இதனால் அடுத்த வாரம் இந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications