பாண்டியன் ஸ்டோர்ஸ்: பாண்டியன் வீட்டில் நடந்த சம்பவம்! பயத்தில் கதறிய கோமதி, அழுத கதிர்.. ராஜி சொன்ன விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 10-ம் தேதிக்கான எபிசோடில், மயில் குடும்பத்தினர் கொடுத்த புகார் காரணமாக, ஜெயிலில் இருந்த விஷயங்களை நினைத்து பார்த்த மொத்த குடும்பமும் சோகத்தில் இருக்கின்றனர். அப்போது அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக பாண்டியன் ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில் செந்தில் மீனாவிடம் நீதான் மயில் குடும்பத்திடம் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க சொன்னியா? எல்லாரையும் தூக்கி உள்ள வச்சா நாம மீண்டும் அந்த குடும்பத்தோட சேர்ந்து வாழலாம்னு எதுவும் பிளான் போட்டியா என்று கேட்க அதற்கு மீனா கோபமாக திட்டுகிறார்.

அதை தொடர்ந்து இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கதிர் ரூமுக்குள் வர, அங்கு ராஜி சோகமாக இருக்கிறார். அப்போது ராஜியிடம் கதிர் மன்னிப்பு கேட்க, அதற்கு கதிர் நீ போலீஸ் ஆகி கெத்தா ஸ்டேஷனுக்கு போகணும் என்று நினைத்தேன். ஆனால் இப்போ குற்றவாளி மாதிரி கூட்டிட்டு போய்ட்டாங்க... நீ என்னை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா உனக்கு இப்படி நடந்திருக்காதே என்று கவலைப்படுகிறார்.
அதற்கு ராஜி உன்னை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா எனக்கு இதைவிட பெரிய பிரச்சனை எல்லாம் வந்து இருக்கும் என்று சொல்கிறார். பிறகு கதிரிடம் பேசும்போது நான் ஸ்டேஷனுக்கு வந்தது கூட பரவாயில்லை ஆனால் அரசியும், அத்தையும் வந்ததுதான் கவலையா இருக்கு என்று சொல்கிறார். அதற்கு கதிர் ஆமா என்னுடைய அம்மா பாவம்.
அவங்க யாரும் இல்லாமல் தனியா இருக்கும்போது உடம்பு சரியில்லாமல் போய் மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க, அவங்களுக்கு ஏதாவது ஆகி இருந்துச்சுன்னா.. என்று வருத்தப்படுகிறார். பிறகு அழுது கொண்டிருக்கும் கதிருக்கு ராஜி ஆறுதல் சொல்கிறார். மறுபக்கத்தில் சரவணன் தூங்கி கொண்டு இருக்கும் போது, இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்கள் எல்லாம் கனவில் வருகிறது.
எல்லோரும் ஜெயிலில் கஷ்டப்பட்டதை நினைத்து பார்த்து தூக்கத்திலேயே கத்தி விடுகிறார். அப்போது பக்கத்தில் இருந்த பழனி என்ன ஆச்சு என்று கேட்டு, அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொண்டு வர செல்கிறார். அதற்கு சரவணன் வேண்டாம் மாமா நீ என் பக்கத்திலேயே இரு என்று குழந்தை போல சொல்ல, பழனியும் பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் சரவணன் போலவே கோமதியும் தூக்கத்திலேயே இரண்டு நாட்கள் ஆக அவர்கள் பட்ட மனவேதனை, தூக்கத்தில் கூட அவர்களை சித்திரவதை செய்கிறது. கோமதி தூக்கத்தில் உளறுவதை பார்த்து அரசி என்னாச்சு அப்பா என்று கேட்க பாண்டியன் ஒன்னும் இல்லை நீ தூங்குமா என்று சொல்கிறார்.
பிறகு அடுத்த நாள் காலையில் எல்லோரும் தூங்கி முழிப்பதற்கு முன்பு பாண்டியன் எழுந்து எல்லோருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்து கொடுக்கிறார். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது சரவணன் இன்னைக்கு கடைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாண்டியன் மட்டும் கடைக்கு போகிறார். அப்போது வாசலில் முத்து வேலை பார்க்க இருவரும்
லேசாக சிரித்துக் கொள்கின்றனர்.
அந்த நேரத்தில் பழனி வீட்டிற்குள் இருந்து வருவதை பார்த்த கோமதி, நீ இரவு முழுக்க இங்கே தான் இருந்திராத என்று கேட்க, அதற்கு பழனி ஆமா, சரவணனை விட்டுட்டு போறதுக்கு மனசு இல்ல அதான் இங்கேயே இருந்துட்டேன் என்று சொல்ல, எனக்கு ஒரு பிரச்சனை என்றதும் எல்லோரும் வந்துட்டீங்க என்று கோமதி அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications