Pandian Stores: பாண்டியனை வீட்டை விட்டு போக சொன்ன கதிர்.. கோமதி அம்மாவால் உடையும் குடும்பம்! தரமான சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் 2026 மார்ச் 16ஆம் தேதிக்கான எபிசோடில், கோமதி மீனாவுடன் கோயிலுக்கு போனதை வைத்து ஒரு பெரிய பஞ்சாயத்தை நடந்து இருக்கிறது கடைசியில் பாண்டியன் எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

கோவிலுக்கு சென்ற கோமதி
சீரியலின் கதையின்படி, கோமதி மீனாவுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றிருக்கிறார். இந்த விஷயம் காந்திமதிக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அந்த சூழ்நிலையை காந்திமதி வேறு மாதிரி பயன்படுத்த நினைக்கிறார். அப்போது கோமதி வீட்டிலேயே தனது செல்போனை மறந்து விட்டதை அவர் கவனிக்கிறார்.
உடனே அந்த போனை எடுத்து சைலண்ட் மோடில் வைத்து விடுகிறார். கோமதி வீட்டில் இல்லாததை வைத்து வீட்டில் பெரிய டிராமா போட்டு, பாண்டியனையும் கோமதியையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்று காந்திமதி ஒரு திட்டத்தை போடுகிறார்.
வீட்டில் பதட்டம்
அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, காந்திமதி வீட்டில் கோமதி காணவில்லை என்று அழுது புலம்ப ஆரம்பிக்கிறார். அப்போது கதிர், பாண்டியனுக்கு போன் செய்து "அம்மா கடைக்கு வந்தாங்களா?" என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன் "இல்லை" என்று சொல்கிறார். உடனே கதிர், "காலையில் இருந்து அம்மாவை காணவில்லை" என்று பதட்டமாக சொல்கிறார்.
இதைக் கேட்டதும் பாண்டியன் அதிர்ச்சி அடைகிறார். உடனே சரவணனிடம் விஷயத்தை சொல்லி கடையை பூட்டி விட்டு அவசரமாக வீட்டிற்கு கிளம்பிச் செல்கிறார்.
வீட்டில் ஒப்பாரி வைத்த காந்திமதி
பாண்டியன் வீட்டிற்கு வந்ததும் காந்திமதி "என் பொண்ணை காணவில்லை" என்று கதறிக் கொண்டிருப்பதை பார்க்கிறார். அதை பார்த்த பாண்டியன், "அவ எங்கயாவது கோவிலுக்கு போயிருப்பா... வந்திருவா" என்று சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்.
கோவிலிலும் இல்லை என தகவல்
அப்போது கதிர் பேசும்போது, "அம்மாவை கோவிலில் தேடி பார்த்தாச்சு... எங்கும் இல்லை" என்று கூறுகிறார். அதற்குள் செந்திலும் வீட்டிற்கு வந்து சேர்கிறார். அம்மா காணாமல் போன விஷயம் தெரிந்ததும் அவர் அதிர்ச்சியடைகிறார்.
மீனாவிடம் கேட்க சொன்ன பாண்டியன்
இந்த நிலையில் பாண்டியன், "அவ மீனா கூட எங்கயாவது போயிருக்காளானு போன் போட்டு கேளு" என்று சொல்கிறார். அப்போது ராஜி, "நான் போன் போடுகிறேன்" என்று சொல்லி வெளியே செல்கிறார். ஆனால் மீனாவுக்கு போன் போனால் காந்திமதி போட்ட திட்டம் முழுக்க கலைந்து போய்விடும் என்று அவர் பயப்படுகிறார்.
ராஜியின் போனை கைப்பற்றிய காந்திமதி
அதனால் உடனே வெளியே சென்ற காந்திமதி, ராஜியின் போனை வாங்கிக் கொண்டு அவரை உள்ளே அனுப்புகிறார். பின்னர் மீனாவிடம் பேசும்போது எதுவும் நடக்காதது போல சாதாரணமாக பேசுகிறார்.
வீட்டில் பொய் சொன்ன காந்திமதி
அதற்குப் பிறகு உள்ளே வந்து "மீனா கூடவும் கோமதி இல்லை" என்று பொய் சொல்லிவிடுகிறார். இந்த தகவலை கேட்டதும் கதிரும் செந்திலும் மிகவும் கோபப்படுகிறார்கள்.
பாண்டியனை சுற்றி நின்று கேள்வி கேட்ட மகன்கள்
கதிர், பாண்டியனை பார்த்து "அம்மா எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்கனு நீங்க பேசாம இருக்கீங்க. நாங்க இப்போ நல்லா தான் இருக்கோம். அப்புறம் ஏன் உங்க ஈகோவை விட்டுக்கொடுக்க மாட்டீங்க?" என்று கேட்கிறார். மேலும் "இப்போ உங்களால தான் என் அம்மா இந்த வீட்டை விட்டு போயிட்டாங்க" என்று கடுமையாக பேசுகிறார்.
செந்திலும் கோபம்
அருகில் இருந்த செந்திலும் கோபமாக பேசுகிறார். "ஏற்கனவே என்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புனீங்க. இப்போ எங்க அம்மாவையும் அனுப்பிட்டீங்களா?" என்று அவர் கேட்கிறார்.
அதற்குப் பிறகு கதிர், "நாங்க ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் பண்ணியதால் இப்போ சந்தோஷமா இருக்கோம். நீங்களும் உங்க விருப்பப்படி சரவணன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிவச்சீங்க. இப்போ அவரோட வாழ்க்கை எப்படி இருக்கு? நியாயமா பார்த்தா நீங்க தான் இந்த வீட்டை விட்டு போயிருக்கணும்" என்று காட்டமாக பேசுகிறார்.
தன் ரூட்டுக்கு கொண்டு வந்த காந்திமதி
அப்போது காந்திமதி குறுக்கிட்டு பேசுகிறார். "பழைய பிரச்சனைகளை விடுங்கடா... இப்போ கோமதி காணாமல் போனதைப் பற்றி மட்டும் பேசுங்க" என்று கூறி அவர்களை தன் திட்டத்திற்கேற்ப அமைதியாக்குகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: ஒன்று சேர்ந்த மருமகள்கள்.. கோமதி குடும்பத்தில் பெரிய குழப்பம்! பாவம் பாண்டியன் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது














Click it and Unblock the Notifications