திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு
சென்னை: நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசும் பல கருத்துகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமாக உள்ளது. அவர் மேடைகளில் பேசும் போது நேரடியாகவும், சற்று வித்தியாசமாகவும் கருத்துகளை வெளிப்படுத்துவதால் அவை பல நேரங்களில் விவாதமாக மாறுகின்றன.
அப்படித்தான் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசிய சில கருத்துகள் தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. அந்த நிகழ்ச்சியில் நடிகை திரிஷா குறித்து பார்த்திபன் பேசியது முதலில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

திரிஷா குறித்து பேசிச் சர்ச்சை
அந்த நிகழ்ச்சியில் பேசும்போது பார்த்திபன் கூறிய சில கருத்துகள் நடிகை திரிஷாவை குறித்தே இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு நடிகை திரிஷா மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.
அதற்கு பதிலாக பார்த்திபனும் தொடர்ந்து இரண்டு வீடியோக்களை வெளியிட்டு தனது விளக்கத்தை அளித்தார். அந்த வீடியோக்களிலும் அவர் தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் சில நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டது.
புதிய வீடியோ மீண்டும் வைரல்
இந்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், அதே நிகழ்ச்சியில் பார்த்திபன் பேசிய மற்றொரு வீடியோவும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சில கேள்விகளை எழுப்ப, அதற்கு பார்த்திபன் வித்தியாசமான பதில்களை அளித்துள்ளார்.
பிரிக்க முடியாதது காதலும் கள்ளக்காதலும்
அதில் தொகுப்பாளர் "பிரிக்க முடியாதது என்ன?" என்று கேட்டபோது பார்த்திபன், "காதலும் கள்ளக்காதலும்" என்று பதில் அளித்துள்ளார். அதன்பிறகு "பிரியக்கூடாதது என்ன?" என்ற கேள்விக்கு, "நம்முடைய குழந்தைகளும் நம்முள் இருக்கும் குழந்தைத்தனமும்" என்று அவர் பதிலளித்தார்.
பாட்டுக்கு நான் தான்
அடுத்து "பாட்டுக்கு யார்?" என்ற கேள்விக்கு பார்த்திபன் சிரித்தபடி "நான் தான்" என்று கூறினார். அதற்குப் பிறகு அதற்கான விளக்கத்தையும் அவர் அளித்தார். "நான் பாட்டுக்கு ஏதாவது பேசிட்டு போயிடுவேன் இல்ல... அதனால்தான் சொன்னேன் நான் தான்" என்று நகைச்சுவையாக பதில் கூறினார்.
நினைவுகள் தான் சேர்ந்து இருக்கும்
அதன்பிறகு "சேர்ந்தே இருப்பது என்ன?" என்று கேள்வி எழுப்பப்பட்டபோது பார்த்திபன் கொஞ்சம் உணர்ச்சிகரமாக பதில் அளித்தார். "நமக்கு பிடித்தவர்களுடைய நினைவுகள்தான். நாம் அவர்களுடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்றாலும் அந்த நினைவுகள் நம்முடன் இருக்கும்.
என்னுடைய மனதிற்குள் கூட 30 வருடங்களாக ஒரு பெண்ணுடைய நினைவு இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு பெண்ணை தொட்டு, அவருடன் வாழ்ந்து தான் காதல் இருக்க வேண்டும் என்று இல்லை. எங்கோ நீ இருந்தாலும் உன்னுடைய நினைவுகள் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். அந்த நினைவுகள்தான் நம்முடன் சேர்ந்து இருக்கும்," என்று அவர் கூறினார்.
சமூக வலைதளங்களில் விவாதம்
பார்த்திபன் இவ்வாறு பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிலர் அவரது பேச்சை பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் சிலர் அதையும் விவாதமாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே நடிகை திரிஷாவை சுற்றிய சர்ச்சை இன்னும் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெளியான இந்த புதிய வீடியோவும் மீண்டும் பார்த்திபனைச் சுற்றி விவாதத்தை கிளப்பியுள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications