என் காயினை வைத்து ஆட்டம் போடுறான் நிரூப்...கதறும் பிரியங்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வாரம் நிலத்தின் ஆளுமை பிக்பாஸ் வீட்டில் கொடிகட்டி பறந்து வருகின்றது.

நிலம் காயின் வைத்திருக்கும் நிரூப் செய்யும் அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை என்று ப்ரியங்கா கதறி வருகிறார்.

பிரியங்காவின் காயினை தனக்கு சொந்தமாக்கிய நிரூப் இப்போ தானே ஜெயிச்சு வாங்கியது போல பண்ணும் அலப்பறை தாங்கல என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

விறுவிறுப்பு தொடங்கிடுச்சு

விறுவிறுப்பு தொடங்கிடுச்சு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது காயின் டாஸ்க் என்கிற பெயரில் பிக் பாஸ் கொளுத்திப் போட்டு இருக்கிறது. ஒரு வழியாக நிகழ்ச்சியும் இப்போதுதான் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுவரைக்கும் உப்பு சப்பு இல்லாமல் எப்படியோ போய்கொண்டிருந்த பிக்பாஸ் தற்போது நிரூப்பின் ஆட்டத்தால் விறுவிறுப்பு கூடியிருக்கிறது என்றும் இனி என்ன நடக்குமோ என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

கலாய்க்கும் ரசிகர்கள்

கலாய்க்கும் ரசிகர்கள்

இந்த சீஸனில் 5 காயின்களை வைத்திருக்கும் போட்டியாளர்களுக்கு அதிகபட்சமான உரிமைகளும், சலுகைகளும் ,யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகாரங்களும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத சக போட்டியாளர்கள் ஒருபக்கம் புலம்பிக்கொண்டு இருந்தாலும், தங்களுடைய மனவருத்தத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர்.

சொதப்பிய இசைவாணி

சொதப்பிய இசைவாணி

ஏற்கனவே கடந்த வாரம் நெருப்பின் ஆற்றல் வாரமாக இருந்தது. அதனால் நெருப்பு காயின் வைத்திருந்த இசைவாணி இந்த வீட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் அவருடைய மதிப்பும் அதிகம் தெரியாத சக போட்டியாளர்கள் அவரை சர்வாதிகாரம் பண்ணுகிறார் என்றும் இவர் பதவி வந்ததும் தலை கனத்ததுடன் செயல்படுகிறார் என்றும் தங்களுடைய இயலாமையை காட்டிக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் இவரிடம் தலைமை பண்பு குறைவாக இருக்கிறது என்றும் ஒரு சில ரசிகர்கள் கூறிவந்தனர். இவர் பவ்யமாக அடுத்தவர்கள் ஏதேனும் தன்னை தப்பாக நினைத்து விடுவார்களோ என்று பயந்து கொண்டு இருந்ததால் தான் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என கூறி வந்தனர்.

ப்ரியங்காவின் கவலை

ப்ரியங்காவின் கவலை

ஆனால் இந்த வாரம் நெருப்பின் வாரமாக இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். நிரூப் செய்யும் செயல்களைப் பார்த்து பிரியங்கா இந்தக் காயின் நான் வைத்திருக்க வேண்டியது. என்னிடமிருந்து லாவகமாக வாங்கி வைத்துக்கொண்டு இவன் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை என்று ப்ரியங்கா புலம்பி வருகிறார் . அதுமட்டுமில்லாமல் ராஜை அடித்து தன்னுடைய மனக்குமுறலை கொட்டிக் கொண்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+