மீண்டும் சந்தித்துக்கொண்ட பிரியங்கா அணி..இப்ப ரொம்ப மாறிட்டாங்க போல
சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைந்ததும் முதல்முறையாக பிரியங்காவின் அன்பு நண்பர்களின் மீட்டிங் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
என்னதான் அடித்துக் கொண்டாலும் தற்போது பிரியங்கா, நிரூப், ஐக்கி மூவரும் செய்த செயல் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வித்யாசமான ஐந்தாவது சீசன்
பிக் பாஸ் ஐந்தாவது சீசன் இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன் களை போன்று இல்லாமல் விறுவிறுப்பாகவும் பல நேரங்களில் கலகலப்பாக இருந்தது. இதற்கு முந்தைய சீசன்களில் அதிகமாக சண்டை சச்சரவுகள் தான் இருந்துகொண்டிருக்கும், ஆனால் இந்த சீசன் அதற்கு மாற்றமாக சண்டை போடும்போது போட்டுக் கொண்டாலும் அடுத்த நிமிடமே கட்டிப்பிடி வைத்தியத்தை செய்து கொண்டு அனைவரும் சகஜமாகி விடுகின்றனர். இது இயல்பான கேரக்டரா?? அல்லது நடிப்பா?? என்று புரிந்து கொள்ள முடியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர்.

லைவில் வரும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைந்தாலும் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த விட்டதே என்று ரசிகர்கள் பலர் பீல் பண்ணி வருகின்றனர். தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அடிமைகளாக மாறிவிட்டனர். அதனால் இந்த நிகழ்ச்சி கலந்துகொண்ட போட்டியாளர்களை பார்க்க முடியவில்லையே என்று ரசிகர்கள் பீல் பண்ணி வந்தனர். அவர்களிடம் சமூக வலைத்தளத்தில் போட்டியாளர்கள் பலர் ரசிகர்களிடம் லைவில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே ஐக்கி பெர்ரி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்துள்ளார். இவர் கையில் போன் இல்லாமல் இருந்து கொள்ளவே முடியாது எனும் நிலையில் தான் இருந்து வந்தாராம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் அங்கே எப்படித்தான் போன் யூஸ் பண்ணாமல் இருந்தார் என தெரியவில்லை என்று ரசிகர்களும் அவரேவும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அடிக்கடி லைவில் ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல டான்ஸ் வீடியோக்களையும், போட்டோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

மாறிவிட்டார்களா
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் போட்டியாளர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து சந்தித்துள்ளனர். அதில் நிரூப், பிரியங்கா மற்றும் ஐக்கி ஆகிய மூவரும் சந்தித்துக்கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் தற்போது ஐக்கி பெர்ரி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது பிரியங்கா மற்றும் நிரூப் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் நிரூப் இடம் ஐக்கி பேசுவது பிரியங்காவிற்கு பிடிக்கவில்லை என்று நேரடியாகவே கூறியிருக்கிறார். ஆனால் தற்போது வெளியே வந்த பிறகு இவர்கள் மூவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி தங்கள் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றனர். வழக்கம்போல கலாய்த்து வருகிறார்கள்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications