ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட்
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான ராதிகா சரத்குமார் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் மனதை நெகிழச் செய்யும் சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "HI" திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவருக்காக சிறப்பு கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தவர் நடிகை நயன்தாரா என்பதுதான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ராதிகா வெளியிட்ட பதிவு
ராதிகா தனது பதிவில், தன்னுடைய வாழ்க்கையில் கிடைக்கும் உண்மையான வெற்றி என்பது தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு தான் என்று குறிப்பிட்டு, நயன்தாரா மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ராதிகா சினிமாவிற்கு வந்து 49 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அதை சிறப்பிக்கும் விதமாக பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். ராதிகா வெளியிட்ட அந்த பதிவில் வெளிப்பட்ட உணர்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராதிகாவின் பயணம்
ராதிகா சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், சின்னத்திரை உலகிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். பல தலைமுறைகளை கடந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றிருப்பது அவரது பயணத்தின் சிறப்பாகும்.
சமீபத்தில் வெளியான "தாய் கிழவி" திரைப்படம் ராதிகாவின் கரியரில் முக்கியமான வெற்றிப் படமாக அமைந்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்த படம், குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. வெளியான சில வாரங்களிலேயே உலகளவில் பல கோடி ரூபாய் வசூலை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ராதிகாவுக்கு மீண்டும் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் நயன்தாரா, தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். அதே நேரத்தில் சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கிக் கொண்டிருக்கிறார் ஆனாலும் அதற்கெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனமாக இருக்கிறார் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக நயன்தாரா வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ராதிகாவுக்காக செட்டிலேயே சர்ப்ரைஸ் கொண்டாட்டம் ஏற்பாடு செய்தது, அவரது மனிதநேயத்தை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ராதிகா மற்றும் நயன்தாரா திரையுலகில் ஒரே நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும், ஒருவருக்கொருவர் மரியாதை காட்டியதும் பலமுறை ரசிகர்களால் கவனிக்கப்பட்டுள்ளது. இப்போது வெளிவந்த இந்த சம்பவம், அவர்களுக்கிடையிலான நல்ல புரிதலையும் நட்பையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.
ஒரு சாதாரண கொண்டாட்டமாக இருந்தாலும், அதில் இருந்த அன்பும் மரியாதையும் தான் இந்த சம்பவத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளது. ராதிகாவின் பதிவு மூலம் வெளிப்பட்ட அந்த உணர்ச்சி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்













Click it and Unblock the Notifications