மணக்கோலத்தில் வலம்வரும் ராஜலட்சுமி-செந்தில்...கவிதை எல்லாம் சும்மா ஆறாக ஓடுதே
சென்னை: திருமண கோலத்தில் ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.
காதலர் தினம் முடிந்தாலும் இவர்களின் காதல் குறையாது என்பதை தற்போதைய புகைப்படங்கள் அனைவருக்கும் விளக்கியுள்ளது.

பாடல் தம்பதிகள்
நாட்டுப்புற கலைஞர்களாக விஜய் டிவியில் அறிமுகமாகி தற்போது திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் மூலமாக தங்களுடைய குரலை உலகமுழுவதும் பரவ செய்திருக்கும் பாடல் தம்பதிகளான ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் ஜோடிகள் தற்போது சமூக வலைத்தளத்தையும் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவரும் நடிகர் நடிகைகளைப் போல செய்யும் செயல்கள் பல நேரங்களில் வைரல் ஆகி விடுகிறது. அந்த மாதிரி தான் தற்போது கூட அதிகமாக ரசிகர்களால் இவர்களுடைய புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்
பிரபலங்கள் பலருக்கும் பிடித்திருக்கும் போட்டோஷூட் மோகம் இவர்களுக்கும் தற்போது அளவுக்கு அதிகமாகவே பிடித்திருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த அளவிற்குத்தான் தற்போது மாடர்ன் உடையிலும் டிரடிஷன் உடையிலும் ஜோடியாக ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் இருவரும் கலக்கி வருகின்றனர். காதல் தம்பதிகளான இவர்கள் கண்ணியம் மாறாமல் எடுக்கும் ட்ரெடிஷனல் புகைப்படங்கள் கூட தற்போது ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருக்கிறது. தற்போது இவர்களுடைய குரலுக்கு பல ரசிகர்கள் தீவிரமான ரசிகர்களாக மாறுகின்றனர்.

புஷ்பா பட பாடல்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டியெலலாம் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் ராஜலட்சுமி ஜோடி தற்போது சீரியல்களிலும் சிறப்பு விருந்தினர்களாக அறிமுகமாகி வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர் சீரியல் என ஒரு சில சீரியல்களில் இவர்கள் கெஸ்டாக கலந்துகொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் திரைப்படங்களையும் விட்டுவைக்காமல் பின்னணி பாடல்களில் கலக்கி வருகின்றனர். சின்ன மச்சான் பாடலுக்கு பிறகு தற்போது ராஜலட்சுமி பாடிய ஓ சாமி எனும் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருக்கின்றது.

கலக்கும் கவிதை கேப்ஷன்
தன்னுடைய காதல் கணவரை மனதில் வைத்துதான் இந்த ஓ...சாமி என்னும் பாடலை இவர் பாடியிருக்கிறார். தற்போது கணவரோடு சேர்ந்து போட்டோஷூட்டில் இவர் கலக்கி வருவதை பார்த்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் இவர்களுடைய போட்டோக்களுக்கு கேப்ஷனும் கவிதைகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருக்கிறது. தற்போது மணக்கோலத்தில் இவர்கள் இருவரும் விதவிதமான போட்டோக்களை அப்லோட் செய்து வருகிறார்கள். அதற்காக பார்த்து பார்த்து கேப்ஷனும் டைப் பண்ணி இருக்கின்றனர். பலர் போட்டோவுக்கு ஆக இதை ரசித்துக் கொண்டிருக்கும் போது ஒருசில ரசிகர்கள் இந்த கேப்ஷன் எதையும் விட்டு வைக்காமல் வேற லெவல் என்று குறிப்பிட்டு கூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications