எல்லாத்தையும் சகிக்க முடியாது...தாமரையை லெப்ட் ரைட் வாங்கிய ராஜு
சென்னை: தாமரைக்கு அட்வைஸ் வழங்கிய ராஜூவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்
தங்கள் மனதில் இருப்பதை அப்படியே சொல்லி விட்டார் என்று பலர் கூறினாலும், வேற லெவல் தலைவா என்று ஆர்ப்பரித்து வருகின்றனர்.
அறிவுரை எல்லாம் நமக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி என்று பக்குவமாக இவர் சொல்லிய விதம் பலரையும் கவர்ந்திருக்கிறது.

எரிச்சல் அடையும் ரசிகர்கள்
இந்த வாரம் முதல் நாளில் இருந்தே தாமரைச் செல்வியின் ஆக்ரோஷம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இவர் மீது தப்பு இருக்கிறதா??..இல்லையா??என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தாலும் இவர் செய்யும் செயல்கள் எரிச்சலூட்டுகிறது என்று இவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆரம்பத்தில் இவர் வெகுளியாக இருக்கிறார் என்று கூறி இவருக்கு சப்போர்ட் கொடுத்து ரசிகர்களை தற்போது இவருக்கு எதிராக கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து
பாவனி, சுருதியிடம் இவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சிலர் முதலில் இவரை திட்டி தீர்த்து கொண்டிருந்தனர். பின்பு எபிசோடு பார்த்த பிறகு இவர் மீது தப்பு இல்லை என்பதை புரிந்து கொண்டாலும் இவர் அந்த விஷயத்தை இன்னும் மறக்காமல் மனதில் வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு முறையும் குத்திக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ப்ரமோவில் மிரட்டுகிறார்
நேற்றைய எபிசோட்டில் தாமரைச்செல்வி உடை உடுத்தும் முறையைப் பற்றி சுருதியை குறை கூறி இருக்கிறார். அதை கேட்டதும் அவருக்கு ஆதரவாக சிபி குரல் கொடுத்ததற்கு, ஒருபக்கம் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தாலும், இன்னொரு பக்கம் இது தவறு என்றும் கூறிவருகின்றனர். இரண்டு மனநிலையில் ரசிகர்கள் இருக்கும்போது இன்றும் தாமரைச்செல்வி அதே வேலையை செய்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து தற்போது இந்த வாரம் முழுக்க இவருடைய பர்பாமன்ஸ் தான் ப்ரமோ வில் காட்டப்பட்டு வருகிறது.

ராஜுவின் அறிவுரை
ஒரு சில ரசிகர்கள் இவர் அடிக்கடி ப்ரமோவில் சண்டை போடும் காட்சிகளைப் பார்த்ததும் இவர் மீது எரிச்சல் அடைந்து வருகின்றனர். இதனை புரிந்து கொண்ட ராஜூ இவருக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். இப்படி சத்தமாக பேசிக்கிட்டு இருக்காதே...இது எப்பவும் பார்ப்பது நல்லா இருக்காது!!..நீ செய்தது சரியாக இருந்தாலும், பார்ப்பவர்களுக்கு அப்படி தோன்றாது, என்று இவருக்கு பக்குவமாக அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். இவர் அதற்கு எந்த ஒரு எக்ஸ்பிரஷனையும் காட்டாமல் இருப்பதை பார்த்ததும் ரசிகர்கள், இனியாவது இவர் திருந்தினால் சரி என்று கூறி வருகின்றனர். இடம், பொருள், ஏவல் என்று இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல இவர் நடந்து கொண்டால் நல்லது. இவர் சிறப்பாக இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications