குழந்தைப் பருவத்திலும் அதே பாவனை.. அப்பவே அப்படி தானா ராஜுவை பார்த்து திகைத்த ரசிகர்கள்
சென்னை: ராஜுவின் குழந்தைப்பருவ புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர்.
அதே பார்வையால் அப்போதே அனைவரையும் கவர்ந்து இழுத்திருக்கிறார் என்று பார்ப்பவர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.

ஐந்தாவது சீசனின் வின்னர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னர் ஆக ஜெயித்து இருக்கும் ராஜுவின் குழந்தைப்பருவ புகைப்படத்தை பார்த்து அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல நாட்களுக்கு பிறகு இவருடைய குழந்தைப்பருவ புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவருடைய புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. பார்த்ததும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் ராஜுவின் குழந்தைப்பருவம் இருந்தாலும் அவருடைய குறுகுறுவென பார்க்கும் கண்களை பார்த்து ரசிகர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உழைப்பிற்கு கிடைத்த வெற்றி
கேமரா முன்பு தான் நடித்ததை விடவும் அதற்குப் பின்னாடி தன்னுடைய உழைப்பை அதிகமாக செலுத்தி தற்போது பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து இருக்கும் ராஜூவிருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாக்கி வருகின்றனர். சின்னத்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் முறையாக ரசிகர்களின் மத்தியில் தன்னுடைய முகத்தை காட்டி இருந்தார். அதற்கு பிறகு இவருக்கு நான்கு வருட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஐந்தாவது சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்.

வெள்ளித்திரையில் வரும் வாய்ப்பு
இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன்களை போலவே இந்த சீசனிலும் ஆரம்பத்திலிருந்து ராஜூ தான் ஐந்தாவது சீசன் வின்னர் என்று ரசிகர்கள் கூறிவந்தனர். ரசிகர்கள் இவருக்கு அளித்த ஆதரவின் காரணமாகவே இவர் அதிகளவில் வாக்குகளை பெற்று இந்த வெற்றி பெற்றிருக்கிறார். இவர் வெற்றி பெற்றதும் வெள்ளித்திரையில் வலம் வர வேண்டும் என்று ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ரசிகர்களின் அன்பை பார்த்து இவரும் ஒரு பல நேரங்களில் நெகிழ்ச்சியாக ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார் .இதுவரைக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வந்த வண்ணமாகவே இவருக்கு இருந்து வருகிறதாம். ஆனால் இவர் இன்னும் எந்த திரைப்படங்களிலும் நடிப்பதற்காக உறுதி செய்யவில்லையாம்.

குழந்தைப்பருவ புகைப்படம்
இவர் மீண்டும் சீரியலில் வருவாரா??என்று இவருடைய சீரியல் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இவர் வாய்ப்பு கிடைத்தால் வருவேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் தனக்கு பிடித்தமான கதையை கேட்டு அதில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி ரசிகர்களுக்கு தன்னுடைய வெற்றி மூலமாகவே நன்றி கூறுவேன் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் இவருடைய குழந்தைப்பருவ புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வந்து கொண்டிருந்தாலும் இவருக்கு வாழ்த்து மழைகளும் அதிகமாக பொழிந்து வருகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications