விளையாட்டை தொடங்கிய ராஜு...விரக்தியில் அக்ஷரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய முதல் ப்ரமோவில் ராஜுவின் விளையாட்டை பார்த்து அக்ஷரா காண்டாகி உள்ளார்.

இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் ராஜுவுக்கு எங்கிரேஜ் கொடுத்து வருகின்றனர்.

ராஜு பிசிக்கல் டாஸ்க் சரியாக விளையாடவில்லை என்று குறைகூறி கொண்டிருந்தவர்களுக்கு இன்றைய ஆட்டம் வேற லெவல் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிக்பாஸில் அறிமுகம்

பிக்பாஸில் அறிமுகம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தற்போது ராஜூவுக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். ராஜூவின் ஒவ்வொரு செயல்களையும் உன்னிப்பாக கவனித்து வரும் அவருடைய தீவிரமான ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் ஏறுமுகமாக இருக்கும் நிலையில் ஒருசில நெகட்டிவர்ஸ் ராஜுவின் செயல்களை கலாய்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு தக்க பதில்களை ராஜூவின் ரசிகர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

சின்னத்திரையில் பிரபலம்

சின்னத்திரையில் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே சின்னத்திரையில் பிரபலமான ராஜு தற்போது பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த நான்கு சீசன்களிலும் காத்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் இவருடைய முயற்சிகள் தோல்வியுற்றாலும் தற்போது ஐந்தாவது சீசனில் இவருக்கு அமோகமாக வரவேற்பு இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய காமெடி மற்றும் செயல்பாடுகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இன்றைய எபிசோட்க்கான முதல் ப்ரமோவில் பிக் பாஸ் இந்த வார எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களில் யார் வின் பண்ணுகிறார்கள் என்று புதுவிதமாக டாஸ்க் வைத்துள்ளது.

முதல் ப்ரமோ

முதல் ப்ரமோ

ஒரு பெரிய சதுர கட்டையில் போட்டியாளர்களின் போட்டோக்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பெல் அடிக்கும் போதும் சதுர கட்டையில் மேலே இருக்கும் போட்டோ உடைய போட்டியாளர் விளையாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். அப்படி வெளியேறாமல் இருக்கும் நபர் இந்த வர எலிமினேஷனில் பாதுகாத்துக் கொள்ளப்படும் என்று பிக் பாஸ் அறிவித்ததும், சதுரக் கட்டைகளை போட்டியாளர்களால் உருட்டப்பட்டு வருகிறது. அதில் ஒரு பக்கத்தில் அக்ஷராவின் முகம் தெரிந்து கொண்டிருக்கிறது.

அக்ஷராவின் கோபம்

அக்ஷராவின் கோபம்

அப்போது அந்த கட்டையின் மேலே ஏறி அமர்ந்தபடி ராஜு கட்டையை உருட்ட வைக்க முடியாமல் தடுத்து வைத்திருக்கிறார். தன்னுடைய விளையாட்டை சிறப்பாக தொடங்கியிருக்கும் ராஜுவை பார்த்ததும் ரசிகர்கள் கொண்டாடி வந்ததும், அக்ஷரா கட்டையில் இருந்து இறங்க சொல்லி ராஜுவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கு அவர் முடியாது என்று கூறியதும் அக்ஷரா கோபத்தில் சென்று கொண்டிருக்கிறார். இதை பார்த்ததும் இன்று பஞ்சாயத்து ரெடியாகி விட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+