எந்தப் பக்கம் போனாலும் அணைக்கட்டுனா எப்படி....காடர்கள் அணியிலும் சண்டை தொடங்கிடுச்சி
சென்னை: எடுத்துக்காட்டாக பேசிய வார்த்தை இந்த அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று ராம் சி நினைக்கவில்லை போல.
காட்டுக்குள்ளே கூட்டமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்த இவர்களின் கூட்டுக்குள் கோபம் என்ற அனல் வீசத் தொடங்கியிருக்கிறது.
இவ்வளவு நாளா சிரித்துக்கொண்டு இருந்தவர்கள் திடீரென்று பொசுக்குன்னு கோவம் பட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்து விட்டார்கள்.

ரியாலிட்டி ஷோ
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் ஜீ தமிழில் டிஆர்பி உயர்ந்து வருகிறது. சரிந்து போன ஜீ தமிழில் டிஆர்பி தற்போது உயர்ந்து வருவதற்கு இந்த நிகழ்ச்சியும் காரணம்தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு நன்றாக பரிச்சயமான நபர்களாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எளிதில் ரீச் ஆகிவிட்டது .

பட்டி தொட்டி எல்லாம் பிரபலம்
அதுவும் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே வேற லெவல் டாஸ்க்கு வைத்து போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் இந்த சர்வைவர் மிரட்டி விட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். தற்போது இதில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். மீதமுள்ள 14 பேர் போட்டியில் தான் இருக்கின்றனர். அவர்களில் 2 போட்டியாளர்கள் மூன்றாம் உலகத்தில் இருக்கின்றனர். அது ரசிகர்களுக்கு தான் தெரியுமே தவிர போட்டியாளர்களுக்கு இந்த செய்தி தெரியாது. இந்த நிலையில் அடுத்ததாக யார் மூன்றாவது உலகத்திற்கு செல்வார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடமும் போட்டியாளர்கள் இடமும் இருந்து வருகிறது.

அந்த அர்த்தத்துல சொல்லலையே
நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்பு அன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ அடிக்கடி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும். அந்த மாதிரி தான் தற்போது சர்வைவர் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ப்ரோமோவில் ராம் சி தன்னுடைய மனநிலையை பற்றி அனைவரிடமும் விவாதித்துக் கொண்டிருக்கிறார். அதில் நீங்கள் எல்லோருமே என்னை விட ஒரு படி முன்னே தான் இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்குமே பேக்ரவுண்ட் இருக்கிறது. அது எனக்கு குறைவாகத்தான் இருக்கிறது. நான் எந்த ஒரு பேக்ரவுண்ட் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே இது முடிஞ்சிடுச்சா??
இவர் இந்த வார்த்தையை சொன்னதும் விக்ராந்த்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அது எப்படி நீங்கள் சொல்லலாம் என்று கோபமாக கேட்டு விட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து போய் விடுகிறார். இதெல்லாம் அனைவர் முகத்திலும் கலவரம் தெரிந்து கொண்டிருக்கும் நேரத்தில், ராம் சி சும்மா அட்வென்ச்சர் கிரியேட் பண்ண பார்க்குறாங்க என்று கூறுகிறார். அதற்கு 'என்ன மேன் சொன்னா நீ கேக்கல' என்று உமாபதி நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், இந்த பிரச்சனை ஏற்கனவே திங்கள்கிழமை முடிந்து விட்டது. ஆனால் அந்த ப்ரோமோவை இப்போது ஒளிபரப்புகிறார்கள். அப்போ அங்கு என்னதான் நடக்கிறது ஏற்கனவே இதற்கான விளக்கத்தை விக்ராந்த் பேசிவிட்டார். இந்த நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் கலாய்த்து வருகின்றனர். ஒருசிலர் உமாபதி, அடுத்தவர்களை கலாய்க்கிறார் என்று இருட்டேடிங் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டி கொண்டிருக்கின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications