போடு...தாறுமாறு ஆட்டம் தான்..ரம்யா பாண்டியனை சுற்றிவரும் கூட்டம்தான்
சென்னை : போட்டோ சூட் எல்லாம் இப்போ பழசாகி விட்டது என்று ஆட்டம் போட்டு ரசிகர்களை ஆட வைத்திருக்கும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் வீடியோ சமூகவலைத்தளத்தில் செம வைரல்.
ஆட்டம் என்றால் இதுதான் ஆட்டம் என்று பார்ப்பவர்கள் எல்லாம் எகிறி குதித்து குத்தாட்டம் போட்டும் வருகிறார்களாம்.
டைட்டு ஜீன்ஸில் ரசிகர்களின் மனதை டைட் ஆக்கிய ரம்யா பாண்டியனை பார்த்ததும் பேச வார்த்தைகளின்றி தவித்து வரும் ரசிகர்கள் கூட்டம் இன்ஸ்டாகிராமில் அலைமோதுகிறது.

மறக்க முடியுமா மொட்டைமாடி போட்டோவை
எத்தனையோ போட்டோ சூட்களை நடத்தி ரசிகர்களின் மனதில் தனக்கான இடத்தை பல நடிகைகள் பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ சூட்டில் மொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்திய ரம்யா பாண்டியனுக்கு இப்போ ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களும் அதிகரித்து விட்டனர். ரசிகர்களின் பேராதரவோடு இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நமக்குள்ள எதுக்கு நன்றி
தான் கதாநாயகியாக நடித்து வெளிவர இருக்கும்.. "ராமன் ஆண்டாலும்,ராவணன் ஆண்டாலும்" திரைப்படத்தின் டிரைலர், ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்ததற்காக நன்றி சொல்லி... ரம்யா பாண்டியன் போட்டுள்ள போஸ்டை பார்த்து,'நாம எல்லாம் ஒரே கண்ட்ரி'.. 'நமக்குள்ள எதுக்கு நன்றி' என்று அவரது ரசிகர்கள் செல்லமாக கோபித்து வருகின்றனர்...

வெற்றிக்கனி அருகில் தான்
இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில், சூர்யா ஜோதிகாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில்.. மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் நடிப்பில் செப்டம்பர் 24-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் இல் வெளிவர இருக்கிறது "ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்" என்கின்ற திரைப்படம் இத்திரைப்படத்தின் மூலம் நடிகை சங்கீதாவின் கணவர் பிரபல பாடகர் கிரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

கலாச்சாரம் சார்ந்த திரைப்படம்
நல்ல தரமான படங்களை கொடுத்து வரும் சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மண், மொழி, கலாச்சாரம், சார்ந்த திரைப்படங்களுக்கு எப்பொழுதும் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். டிரைலரை பார்க்கும் பொழுது கதை கிராமிய வாசம் வீசும் மண்சார்ந்த கதையாக தெரிவதால் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வண்ணம் படம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.வெள்ளையன், கருப்பன், என்கிற இரு காளைகள் சம்பந்தப்பட்ட கதை படத்தின் மையக் கருவாக இருக்கும்போல.

விருது பெற்ற ஜோக்கர்
தேசிய விருது பெற்ற "ஜோக்கர்" படத்தில் நடித்திருந்த நம்ம ரம்யா பாண்டியன் அப்படத்தில் நடித்ததற்காக அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்றிருந்தார். இதனால் தனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும், நாமும் பிசியாகி விடுவோம் என்று நினைத்திருந்த ரம்யா பாண்டியனுக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றம்தான்.வாய்ப்பு ஏதும் இல்லாமல் இருந்த காலகட்டத்தில் தான் பிக் பாஸ், மற்றும் சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று வந்தார்.எதேச்சையாக பேப்பர் விளம்பரத்தில் ' ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்' படத்தில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து வாண்டடாக படக்குழுவை தொடர்பு கொண்டிருக்கிறார், அந்த நேரத்தில் ரம்யா பாண்டியன் மீதிருந்த கிளாமர் இமேஜ் காரணமாக இவரை வேண்டாம் என்று சொல்லி விட்டனராம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications