கெனிஷாவுடன் ஜோடியாக சுற்றும் ரவி மோகன்.. ஆதங்கத்துடன் போஸ்ட் போட்ட ஆர்த்தி ரவி.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: கடந்த சில மாதங்களாக நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுவரை சர்ச்சைகளிலிருந்து விலகியே இருந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருந்த ரவி மோகன், 2024ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு அறிவிப்பின் மூலம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ரவி மோகனும், ஆர்த்தியும் கடந்த 2009ஆம் ஆண்டு நீண்டகால காதலுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப வாழ்க்கை வெளிப்படையாக எந்த சலசலப்பும் இல்லாமல் சென்றுகொண்டிருந்த நிலையில், "எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆர்த்தியிடமிருந்து பிரிகிறேன்" என ரவி மோகன் திடீரென அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த முடிவு குறித்து பேசும்போது, ஆர்த்தி தரப்பில் இருந்து, "இந்த பிரிவு முடிவு தன்னிடம் ஆலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டது. பேச முயன்ற எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன" என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்தது.
திருப்பம்
இந்த விவாகரத்து விவகாரத்தில் ஆர்த்தியின் தாய் சுஜாதா பெயரை ரவி மோகன் தனது விளக்க அறிக்கையில் குறிப்பிட, அதுவே புதிய சர்ச்சைக்கு வழிவகுத்தது. "தனக்கு தேவையான மரியாதை கிடைக்கவில்லை" என விளக்கமளித்த ரவி, மறைமுகமாக சுஜாதாவையும் காரணமாக காட்டியதாக கூறப்பட்டது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் சிலர் சுஜாதாவையே "வில்லி" என சித்தரிக்கத் தொடங்கினர்.
ஆனால் இதை மறுத்த சுஜாதா, "என் மகளும், மருமகனும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும்" என்ற கோரிக்கையோடு ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த விவகாரம் குடும்ப அளவிலிருந்து பொது வெளி விவாதமாக மாறியது.
விவாகரத்து வழக்கு
பிரிவு முடிவில் உறுதியாக நின்ற ரவி மோகனை எதிர்த்து, ஆர்த்தி நீதிமன்றத்தை அணுகி, மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, பின்னணி பாடகியும் தெரபிஸ்ட்டுமான கெனிஷாவுடன் ரவி மோகன் நெருக்கமாக பழகுவதாக தகவல்கள் வெளியானது. ஆரம்பத்தில் இதை மறுத்த ரவி, காலப்போக்கில் பல நிகழ்ச்சிகளில் கெனிஷாவுடன் ஜோடியாக தோன்றத் தொடங்கினார். இதனால், "கெனிஷா காரணமாகத்தான் இந்த பிரிவு" என்ற கிசுகிசுக்கள் மேலும் வலுத்தன.
இன்ஸ்டா போஸ்ட்கள்
சமீபத்தில் ரவி மோகன், கெனிஷாவை அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில், ஆர்த்தி தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "சிலர் செய்த பிஆர் வேலை காரணமாக என் அம்மாவை வில்லியாக சித்தரித்தார்கள். ஆனால் உண்மையை காலம் நிரூபித்துவிட்டது" என்று உருக்கமான பதிவை வெளியிட்டார். இந்த போஸ்ட், ரவியை மறைமுகமாக தாக்கியதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
தொடரும் சர்ச்சை
ஒருபுறம் நீதிமன்ற வழக்குகள், மறுபுறம் சமூக வலைதள போஸ்ட் யுத்தங்கள் என, ரவி மோகன் - ஆர்த்தி விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை எடுத்து வருகிறது. இறுதியில் இந்த விவகாரம் எந்த முடிவை எட்டும் என்பதே தற்போது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications