பட்டு வேஷ்டி, பக்கத்திலேயே மகாலட்சுமி தல தீபாவளியை கொண்டாடும் ரவீந்தர்.. மனைவியை குறித்து நெகிழ்ச்சி
சென்னை: சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் தல தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருக்கின்றனர்.
தான் ஒரு தயாரிப்பாளர் என்பதை தீபாவளி நாளில் சிறப்பாகவே நிரூபித்திருக்கிறார் ரவீந்தர் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
திருமணம் முடிந்த நாளிலிருந்து இப்ப வரைக்கும் இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்துவது போல தல தீபாவளி புகைப்படங்களும் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மறைத்து வைத்த காதல்
தயாரிப்பாளர் ரவீந்தர் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒன்றரை வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்தாலும், இவர்கள் இருவருடைய காதல் பற்றி யாருக்குமே தெரியாமல் தான் இருந்து வந்துள்ளது. ரவீந்தர் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்பவராகவும் இருந்து வருகிறார். இவர் ரிவ்யூ செய்வதை பார்ப்பதற்காகவே பலர் இவரை பாலோ செய்து வருகின்றனர்

பிடித்துப் போன பாசிடிவ் கேரக்டர்
நெட்டிசன்கள் பலமுறை இவரைப் பற்றி நெகட்டிவ் கருத்துக்கள் வெளியிட்டு வந்தாலும் உடல் உருவத்தை வைத்து இவரை கலாய்த்தாலும் கண்டு கொள்வதே கிடையாது. இது இவருடைய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்து வருகிறது. இதைப் பிடித்துப்போன மகாலட்சுமி இவர் தயாரிக்கும் புகைப்படத்தில் நடிக்கும் போது இவரிடம் காதலை தெரிவித்துவிட்டாராம். இவர்கள் இருவருடைய காதலும் பொத்தி பொத்தி வைத்த நிலையில் ரகசியமாக திருமணத்தை திருப்பதி கோயிலில் முடித்திருந்தனர்.

திருமண புகைப்பட கேப்ஷன்
ஏற்கனவே திருமணம் முடிந்திருந்த ரவீந்தர் தற்போது மகாலட்சுமியை திருமணம் முடித்த பிறகு இவருடைய வாழ்க்கையில் கவிதைகள் ஆறாக பாய்ந்து கொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் முடிந்த நாள் புகைப்படங்களை பதிவிட்டதுமே மகாலட்சுமியை குறித்து, "மகாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க, ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடைச்சா? " என்று கேப்ஷன் கொடுத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்.

தீபாவளியில் கவிதை மழை
திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இவர்கள் தலை தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே தான் தலை தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாதத்தில் அவசரமாக மகாலட்சுமி ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டிருந்தாராம். இந்த நிலையில் இவர்களுடைய தல தீபாவளி கொண்டாட்டம் அமோகமாக இருந்து வருவதை அமர்க்களமாக இன்ஸ்டாகிராமில் தெரியப்படுத்தி இருக்கின்றனர். இன்று எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ரவீந்தர், "என்னை நேசிக்கிற ஒருத்தி என்னை சுற்றி சுற்றி வர ஒவ்வொரு நாளும் எனக்கு தீபாவளி தான். ஆனால், இன்னைக்கு எனக்கு தல தீபாவளி.. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள். சந்தோஷமாக இருங்க, சந்தோஷமாக இருப்போம்..!"என்று பதிவினை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு மகாலட்சுமியும் ஆல்வேஸ் மை லைஃப் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
-
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications