சிவந்த புடவையில்.. பரவசமூட்டிய கண்ணம்மா.. ஓடி வந்து நெக்குருகிய ஃபேன்ஸ்!
சென்னை : என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று ஏங்க வைக்கும் பார்வையால் துடிக்க வைக்கிறாரே நம்ம பாரதி கண்ணம்மாவின் ரோஷ்னி ஹரிப்ரியன். அவர் போட்டுள்ள லேட்டஸ்ட் சேலை கலெக்ஷன்தான் இப்போது ரசிகர்களின் திவ்ய சுற்றுலாவாக மாறியுள்ளது.
காற்றிலாடும் சேலை முந்தானையை லாவகமாக பிடித்தபடி ரசிகர்களின் இதயத்தையும் அள்ளி எடுத்து விட்டாரே என்று கொண்டாடிக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ரோஷ்னிக்கு கண்ணம்மா சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து விட்டனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் வைரமே, தங்கமே என்று கொஞ்சும் ரசிகர்கள்தான்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேரழகி மட்டுமல்லாமல் சாக்லேட் நிறத்தழகி கண்ணம்மா சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அழகு தேவதைதான் இந்த ரோஷ்னி. அவரது சிரிப்புக்கும், கவர்ந்திழுக்கும் அந்த பேச்சுக்கும், கலருக்கும்தான் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

அசத்தும் கண்ணம்மா
மாடர்ன் உடையில் அங்கும் இங்கும் அங்கங்கள் தெரியும்படி வந்தால் தான் அழகா?? இல்லை இல்லை சொக்கவைக்கும் சிவப்பு புடவையில் பார்வையாலேயே பரவசப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார் நம்ம அழகு கண்ணம்மா ரோஷ்னி ஹரிப்ரியன். விடுவார்களா ரசிகர்கள்.. கமெண்டுகளும், லைக்களும் இன்ஸ்டாகிராமில் குவிகின்றது. இவருடைய இந்த அழகான புடவை போட்டோவை பார்த்து இவர் அழகா??அல்லது இவருடைய கண்ணழகா??என்று ரசிகர்களுக்குள்ளே பட்டிமன்றமே போய்க்கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு காந்தம் போல இழுக்கும் இவருடைய கண்ணை பார்த்து தான் இவருக்கு இந்த சீரியலில் கண்ணம்மா என்று பெயர் வைத்தார்களோ என்னவோ என்று பலருக்கு சந்தேகம் தோன்றுகிறதாம்.

சுருக்கினால் என்ன வரும்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதுவும் அந்த சீரியலின் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் பலபேர் அவருடைய பெயரையே தெரியாமல் கண்ணம்மா என்று அழைத்து வருகின்றனர். அதுவும் தற்போது குழந்தைகள் அவரை சமையல் அம்மா என்று அழைத்து வருகிறது. ஆனால் இதை வைத்து பல மீம்ஸ்கள் பறந்து வருகிறது. கண்ணம்மா என்னும் பெயரை சுருக்கினா என்ன வரும்??என்று மீம்ஸ்கள் பறந்து வருகின்றன. அதற்கு பலர் சமையல் அம்மா என்று கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே இந்த சீரியலுக்கு மீம்ஸ்கள் ரெக்கை கட்டி பறந்து வருவது போதாது என்று இப்போது சமையல் அம்மா என்னும் பெயரும் சேர்ந்து விட்டது.

அசத்தும் புடவையின் போட்டோக்கள்
ரோஷ்னி ஹரிப்ரியன் முதல் முதலில் பாரதிகண்ணம்மா சீரியலில் தான் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இவர் இதற்கு முன்பு ஒருசில மாடல் போட்டோஷூட் களை எடுத்துக் கொண்டிருந்தார். டிக் டாக் மட்டும் மற்றும் மாடலிங்கில் ஆர்வமாக இருந்த இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தானே எடுக்கும் போட்டோக்களை எடிட் பண்ணி போஸ்ட் போட்டு கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த இந்த பாரதி கண்ணம்மா சீரியல் டீம் இவருக்கு ஆடிஷனில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இவரும் அதில் கலந்து தான் பார்ப்போமே என்று போய் இருக்கிறார்.

கிடைச்ச வாய்ப்பை விடலையே
ஆனால் அதில் இவர் செலக்ட் ஆனதும் செம மகிழ்ச்சியில் இருந்திருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் இந்த சீரியலில் இவர்தான் ஹீரோயின் என்று தெரிந்ததும் இவருடைய கூட நடிக்கும் நடிகர்கள் முதல் சூட்டிங் பார்க்க வருபவர்கள் வரை பலரும் இவரா கதாநாயகி??என்று ஷாக்காகி இருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த சீரியலில் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம் என்று தெரிந்த பிறகு அவர்கள் எல்லாம் வாயை திறப்பதில்லை என்று சந்தோசமாக கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அந்த மாடலிங் ஆசை மட்டும் இவரை விட்டு போகவில்லை. அதனால்தான் கிடைக்கும் நேரங்களில் போட்டோக்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார். சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் இவர் ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு நாளுக்குநாள் ரசிகர்கள் வட்டாரம் பெருகிக்கொண்டு வருகிறது.

அந்த கண்ணுக்குள்ள ஏதோ இருக்கு
இவரும் எத்தனையோ ரீல்ஸ் வீடியோக்களையும் விதவிதமான போட்டோஷூட் களையும் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகிற மாதிரி தற்போது ப்ரீஹேரோடு அசத்தும் புடவையில் செமையா லுக்கு விட்டு ரசிகர்களுக்கு போதை ஏற்றிருக்கிறார். சீரியலில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் இவர் உண்மையில் திருமணம் கூட இன்னும் முடியவில்லையாம். ஆனாலும் வீட்டில் உள்ள குடும்ப பெண்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் வசீகரிக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் விரிவடைந்து கொண்டே போகிறது. அதுவும் தற்போது போதையேற்றும் கருகரு விழிகளால் கருகருவென இருக்கும் தலைமுடியை ஃப்ரீயாக விட்டபடி மாஸா லுக்விட்டு இருக்கிறார். இந்த பார்வைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள். அதுவும் அவர் அந்த போட்டோவில் முதல் போட்டோவில் இருக்கும் சிரித்த முகத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லையே என்று சிலர் ஏங்கி இருக்கின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications