ராஜ்கிரண் மகளோடு திருமணமா..!!?? தெளிவுபடுத்திய சீரியல் நடிகர் முனீஸ் ராஜா.. உண்மை இதுதானாம்
சென்னை: நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
தன்னுடைய திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முனீஸ் ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
முனீஸ் ராஜா பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், இரு வீட்டாரின் சம்மதத்தோடு ரசிகர்களிடம் கூறுவதாக இருந்ததாகவும், ஆனால் தற்போது தன்னுடைய திருமணத்தைப் பற்றி பல தப்பான செய்திகள் பரவி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறியுள்ளார்.

நாதஸ்வரம் சம்மந்தம்
சன் டிவியில் ஒளிபரப்பான சம்மந்தம் கேரக்டரில் பலருக்கும் பரிட்சயமான முனீஸ் ராஜா முதல் சீரியலில் தன்னுடைய அல்டிமேட் காமெடியாலும் தன்னுடைய வித்தியாசமான உடல் அசைவினாலும் பலரையும் கவர்ந்திருந்தார் . முதல் சீரியலில் இவர் தமாசாக பேசும் வார்த்தைகளும், கலர் கலரான சட்டைகளும் அதற்கு மேட்ச் ஆன கண்ணாடிகளையும் யாராலையும் மறக்க முடியவில்லையாம். இந்த சீரியலில் வெற்றிக்கு முனீஸ் ராஜாவும் சம்மதம் கேரக்டரோடு ஒன்றி பயணித்தது ஒரு காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஜோடி தர்ஷா குப்தாவாம்
நாதஸ்வரம் சீரியலுக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் கதாநாயகனாக நடித்து பலருடைய கவனத்தையும் ஈர்த்து இருந்தார். இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில் இரண்டு நடிகைகள் இருந்தனர். அதில் ஒருவர் நடிகை தர்ஷா குப்தா. தர்ஷா குப்தாவுக்கு ஜோடியாக முனீஸ் ராஜா நடித்திருப்பது தர்ஷாவின் தீவிரமான ரசிகர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி இருந்ததாம். பல ரசிகர்கள் இவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கோபத்தை காட்டி வந்தனர்.

வதந்தியா
முள்ளும் மலரும் சீரியல் பிறகு தேவராட்டம் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். திரைத்துறையில் இருந்தாலும் இவர் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவலாக பரவி வருகிறது. இவர் நடிகர் ராஜ் கிரண் மகளான ஜீனத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவி வந்தது.

முனீஸ் ராஜாவின் பதில்
இந்த நிலையில் இன்று முனீஸ் ராஜா தன்னுடைய மனைவியோடு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், "என் பெயர் முனீஸ் ராஜா. இவங்க என்னுடைய மனைவி பிரியா நாச்சியார். நாங்கள் இருவரும் காதலித்து ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொண்டோம். முறைப்படி இரு விட்டார் பெரியவங்க சம்மதத்தோட மேரேஜ் இன்விடேஷன் அடித்து உங்க எல்லாருக்கும் கொடுத்து கூப்பிட வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். ஆனால் நேற்று பத்திரிகைகளில் எங்கள் மேரேஜ் சம்பந்தமாக கொஞ்சம் தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் இந்த வீடியோ போட வேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது. கூடிய விரைவில் எங்க இரண்டு வீட்டின் பெரியவங்க சம்மதத்தோட மேரேஜ் இன்விடேஷன் அடித்து உங்க எல்லாத்துக்கும் ரிசப்ஷனுக்கு கூப்பிடுறேன். இந்த செய்தி கேட்டு எங்கள வாழ்த்தின அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், பெரியவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து உங்கள் சப்போர்ட் எங்கள் இருவருக்கும் தேவைப்படுகிறது" என்று கூறி இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications