உண்மையான தேவதைகள் அந்த தீயணைப்பு வீரர்கள் தான்...தீ விபத்தில் தப்பிய ஸ்ரீயின் திக் திக் நிமிடங்கள்
சென்னை: சென்னை வணிக வளாகத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கிய அந்த தருணத்தில் நடந்த நிகழ்வுகளை பற்றி ஸ்ரீ கூறியிருக்கிறார்.
திடீரென்று வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் பலருக்கும் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைத்து விடுகிறது என்று ஸ்ரீ உருக்கமாக கூறியிருக்கிறார்.

திடீர் தீ விபத்து
சென்னை பாண்டி பஜாரில் வணிக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தீ விபத்தில் 80க்கும் மேற்பட்ட மக்கள் மாட்டிக்கொண்டனர். அந்த இடத்தில் சின்னத்திரை நடிகரான ஸ்ரீ மற்றும் அவருடைய அம்மாவும் இருந்துள்ளார். இவர் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கே பிரேயர் செய்வதற்காக சென்றிருந்தார்களாம். அவர் சென்றிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அந்த மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்து நடந்து இருக்கிறது என்று புரிந்து கொண்டு இவர்கள் இருந்த இடத்தை விட்டு கிளம்புவதற்குள் அங்கே முழுவதுமாக கருப்பு புகையோடு சூழ்ந்துகொண்டதாம்.

திக் திக் நிமிடங்கள்
திடீர் தீவிபத்தில் தான் மட்டுமில்லாமல் குழந்தைகள் வயதானவர்கள் கர்ப்பிணிகள் என பலரும் இருந்துள்ளார்கள். அனைவருக்கும் புகையினால் இருமல் ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் நல்ல வழியாக இவர்களுக்கு மாடிக்கு செல்லும் வழி தெரிந்திருக்கிறது. அது போல கடவுள் புண்ணியத்தில் தான் அந்த மாடிக்கு செல்லும் கதவு திறக்கப்பட்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அப்போது இவருடைய கையிலிருந்த செல்போனை எடுத்து கூட உறவினர்களிடம் பேச முடியவில்லையாம். அந்த அளவிற்கு இருட்டாகவும் இருந்ததாம். இவருடைய அம்மாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருக்கிறது அதுபோல உள்ளே இருந்த கர்ப்பிணி ஒருவருக்கும் இருமல் அதிகமாக ஏற்பட்டுக்கொண்டிருந்ததாம். இதைப் பார்க்கும்போது அனைவருக்குமே பெரிய அளவில் பயம் இருந்திருக்கிறது. இவரோடு இவர் வயதில் இருக்கும் ஒரு சில ஆண்கள் சேர்ந்து அனைவருக்கும் ஆறுதல் கூறிக்கொண்டு இருந்துள்ளார்கள்.

கற்களை எறிந்த மக்கள்
வெளியே இருந்து மக்களெல்லாம் கற்களை தூக்கி எரிந்து கண்ணாடியை உடைத்த படி இருந்திருக்கின்றனர். முதலில் இவர்களுக்கு எதற்காக கற்களை தூக்கி எறிகிறார்கள் என்று தெரியாமல் இருந்தாலும் பின்பு அவர்கள் கண்ணாடியை உடைத்த பிறகு தான் தீ வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. அப்போது வெளியே இருந்த மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார். நல்லவேளையாக அந்த நேரத்தில் தீயணைப்பு வண்டி வந்திருக்கிறது. வந்த முதல் வண்டியில் தண்ணீர் முடிந்து விடவே இவர்களுக்கு மேலும் பயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் உடனே மற்ற மூன்று வண்டிகள் தொடர்ந்து வந்துள்ளது. அவர்கள தங்களுடைய பணியை நொடிப்பொழுதும் தாமதிக்காமல் செய்து கொண்டிருந்தார்களாம்.

உண்மையான தேவதைகள்
கடவுள்களால் நேரில் வர முடியாத நேரங்களில் அவர்கள் யாரேனும் உருவத்தில் வந்து உதவுவார்கள் என்பதில் தான் உறுதியான நம்பிக்கை வைத்திருப்பது போல, அந்த நேரத்தில் பல இன்னல்களை கடந்து உள்ளே வந்து அனைவரையும் காப்பாற்றிய அந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தான் இவர்களுடைய கண்களுக்கு தேவதையாகவும் ,கடவுளாகவும் தெரிந்ததாக கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் உள்ளே இருந்த ஒருவருக்கும் ஒன்றும் ஆகாமல் காப்பாற்றப்பட்டது பெரிய செயல்தான் என்றும், வாழ்க்கையில் எந்த ஒரு தருணமும் நிரந்தரமில்லை என்பதை தனக்கு கண்முன்னே இந்த நிகழ்வு காட்டிவிட்டது என்று கூறியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications