கூட நடித்தது தப்பா...அதற்காக இப்படியா..!!??குமுறும் நடிகை அபிதா
சென்னை: நடிகை அபிதா தான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய கசப்பான அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
பொதுவாக திரை பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானதாக இருந்தாலும் நடிகை அபிதா தனக்கு சம்பந்தமே இல்லாத சர்ச்சையில் சிக்கி இருக்கிறேன் என்று உண்மையை உடைத்துள்ளார்.
திரை பிரபலங்களான நளினி மற்றும் ராமராஜன் இருவரும் விவாகரத்து செய்த நேரத்தில் அவர்களுடைய விவாகரத்திற்கு காரணம் அபிதா தான் என்ற செய்தி பரவலாக பரவி வந்ததாம். அதை நினைத்து பல நாட்கள் தூங்காமல் தவித்து வந்ததாக அபிதா தெரிவித்துள்ளார்.

சேது பட நாயகி
சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியல் மூலமாக பலருக்கும் பரீட்சையமான அபிதா அதற்கு முன்பு கதாநாயகியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அபிதா நடித்து பிரபலமான சேது திரைப்படம் பலரும் அறிந்ததாக இருந்தாலும் அந்த திரைப்படத்தில் வரும் அமைதியான கேரக்டர்தான் அபிதாவாம். அவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அமைதியாக தான் இருப்பாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் அவ்வளவு எளிதில் பேசிவிடமாட்டாராம். ரொம்பவே கூச்ச சுபாவம் உடைய அபிதா ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு திருமணம் முடிந்து விட்டது. திருமணத்திற்கு பிறகு சில காலம் அவர் திரையுலகை விட்டு விலகி இருந்தார்.

திருமதி செல்வம் அர்ச்சனா
திருமணத்திற்குப் பிறகு மீண்டும் அபிதா சின்னத்திரையில் அறிமுகமானார். அபிதாவின் முதல் சீரியல் குடும்ப பெண்களை வெகுவாக கவர்ந்து விட்டது. திருமதி செல்வம் சீரியலில் அர்ச்சனாவாக இப்ப வரைக்கும் இவரை பலரும் அழைத்து வருகின்றனர். தற்போது மீண்டும் ஜீ தமிழில் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக அபிதா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னைப் பற்றிய சர்ச்சையான செய்தி மனதை இப்ப வரைக்கும் நெருடுவதாக கூறியிருக்கிறார்.

நெருடலான வதந்தி
திரை பிரபலங்கான ராமராஜன் மற்றும் நளினி இருவரும் காதலித்து திருமணம் செய்து தங்களுடைய திருமண வாழ்க்கை திருப்திகரமாக இல்லை என்று இருவரும் முடிவு எடுத்து அந்த வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தனர். அந்த நேரத்தில் ராமராஜுடன் அபிதா நடித்துக் கொண்டிருந்தாராம். அதனால் நளினியை பிரிவதற்கு அபிதா தான் காரணம் என்ற செய்தி பரவி வந்ததாம். இதைக் கேட்டதும் அபிதா மனம் உடைந்து போய்விட்டாராம் சூட்டிங் ஸ்பாட்டில் கூட அதிகமாக யாரிடமும் பேசாமல் இருக்கும் போது கூட இப்படி எல்லாம் வதந்திகள் பரவுகிறது என்று வேதனையோடு இருந்தாராம். அந்த நேரத்தில் இவர் பல நாட்கள் இதை நினைத்து தூங்காமல் தவித்து வந்துள்ளார் என்று கூறியிருக்கிறார்.

ரசிகர்களின் அறிவுரை
வெள்ளித்திரையிருந்து சின்னத்திரையில் கதாநாயகியாக மாறி இருக்கும் அபிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர், கூட நடித்தது ஒரு குத்தமா..!!?? அதற்காக இப்படியெல்லாம் கூட சொல்வார்களா?? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். என்னதான் வதந்திகள் என்றாலும் அதற்கு ஒரு வரைமுறை இல்லையா.!!?? ஒருவரை பற்றி தப்பாக பேசுவதற்கு முன்பு, அது அவர்களுக்கு எவ்வளவு வலிகளையும், வேதனைகளையும் கொடுக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுரைகளை கூறி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications