ஸ்ரீநிதி செய்யறது ரொம்ப தப்பு.. போனை பறித்த தாய்.. நட்சத்திரா விஷயத்தில் நடந்தது என்ன?
சென்னை: ஸ்ரீநிதி செய்வது மிகவும் தவறு. நட்சத்திரா நல்ல பொண்ணு, அவர் பிரிந்து போனதை தாங்க முடியவில்லை என்பதால் மனபிரம்மையில் பேசியுள்ளதாக ஸ்ரீநிதி தாய் பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி அண்மைக்காலமாக எதையாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்கிறார். வலிமை படம் வந்த போது படம் வலிமையாகவே இல்லையே என கூறி ரசிகர்களிடம் கடுமையான சொற்களால் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
அண்மையில் நான் சிம்புவைதான் திருமணம் செய்து கொள்வேன் என அடம்பிடித்த ஸ்ரீநிதி, இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில் நவம்பர் 18ஆம் தேதியிலிருந்து நான் மன உளைச்சலில் இருக்கிறேன். எனது நெருங்கிய தோழி நட்சத்திராவுக்கு அப்பா இல்லை.

சின்னத்திரை
அம்மா மட்டும்தான். கஷ்டப்பட்டு சின்னத்திரைக்குள் வந்திருக்கிறாள். என் வீட்டில் இரண்டரை ஆண்டுகள் இருந்தாள். நான் அறிமுகப்படுத்திய ஒரு பையனை அவள் காதலித்தாள். நவம்பர் 18ஆம் தேதி நட்சத்திராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் எங்களுக்கு தெரியவே தெரியாது.

வார்த்தை
எங்களுக்கு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இதை தட்டி கேட்டதுக்கு நட்சத்திரா அம்மா என்னை அடிக்க வந்தார்கள். நட்சத்திராவுக்கு அநியாயம் நடக்குது, என்னால் காப்பாற்ற முடியலை. விஜே சித்ராவின் நிலை நட்சத்திராவுக்கு ஏற்படுமோ என்ற பயம் இருந்தது என இன்ஸ்டாவில் கூறியிருந்தார்.

ஸ்ரீநிதியின் தாய்
இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஸ்ரீநிதியின் தாய் இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஸ்ரீநிதி செய்யறது ரொம்ப தப்பு. நட்சத்திரா விஷயத்தில் அவள் சொல்வது எல்லாமே சரிதான். ஆனால் தன்னுடனே இருந்த நட்சத்திராவின் பிரிவை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இப்படி பேசியுள்ளார்.

ஸ்ரீநிதி இன்ஸ்டா போஸ்ட்
ஸ்ரீநிதியை நான் சரி செய்து விடுவேன். ரொம்ப கஷ்டப்பட்டு இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டை கண்டுபிடித்து அந்த வீடியோ டெலிட் செய்தேன். உண்மையை உலகிற்கு சொல்ல வேண்டும் என ஸ்ரீநிதி நினைக்கிறார். ஆனால் அது சாத்தியமே இல்லை. சிம்பு விவகாரம் குறித்து நான் எதையும் பேச விரும்பவில்லை. சிம்புவுக்கு நிறைய பேர் ரசிகைகளாக இருப்பதை போல் ஸ்ரீநிதியும் ரசிகைதான். நட்சத்திரா நல்ல பொண்ணு. அந்த பையனும் நல்ல பொண்ணு. ஸ்ரீதியால் நட்சத்திராவின் பிரிவை தாங்க முடியலை. ஸ்ரீநிதிக்கு நேரம் சரியில்லை. அதனால் நான் விட்டு பிடிக்க வேண்டும். அவருடைய போனை நான் பிடுங்கி வைத்துக் கொண்டேன் என்றார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications